For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்னொரு 'யுத்த'த்தை தடுக்க விரைவில் தமிழக அமைச்சரவை மாற்றம்? பீதியில் 'ஸ்லீப்பர் செல்கள்'

அதிமுகவில் இன்னொரு யுத்தம் வெடிக்காமல் இருக்க சட்டசபை கூட்டத் தொடர் முடிவடைந்த உடனேயே அமைச்சரவை மாற்றம் நடைபெறலாம் என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவில் இன்னொரு யுத்தம் வெடிக்காமல் இருக்க சட்டசபை கூட்டத் தொடர் முடிவடைந்த உடனேயே அமைச்சரவை மாற்றம் நடைபெறலாம் என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.

ஆர்.கே.நகர் தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு முக்கியக் காரணமே கடைசி நேரத்தில் தினகரன் காட்டிய சித்து வேலைகள்தான். இருபது ரூபாய் நோட்டைக் காட்டியே பெரும் வாக்குகளை அறுவடை செய்துவிட்டார் என்கிறது அதிமுக வட்டாரங்கள்..

ஓபிஎஸ்ஸுடன் இணைப்பு நடத்தியபோது, ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்களை நீக்க மாட்டோம் என உறுதியாகக் கூறிவிட்டனர். இதேநிலை தொடருவதால் அதிமுகவுக்குள் ஸ்லீப்பர் செல்கள் ஏராளமாக கெத்தாக வலம் வந்து கொண்டிருக்கின்றனராம்.

ஸ்லீப்பர் செல்கள் டிஸ்மிஸ்

ஸ்லீப்பர் செல்கள் டிஸ்மிஸ்

இவர்களையும் கட்சிப் பதவியில் இருந்து நீக்க தொடங்கிவிட்டனர் இபிஎஸ்ஸும் ஓபிஎஸ்ஸும். இந்த அதிரடி ஆண்டு முழுவதும் நடைபெற உள்ளது.

மதுசூதனன் விஸ்வரூபம்

மதுசூதனன் விஸ்வரூபம்

மேலும் சட்டசபைக் கூட்டத் தொடர் நடந்து கொண்டிருப்பதால், தினகரனை சமாளிப்பது குறித்துத்தான் அமைச்சர்கள் கவலையாக இருக்கின்றனராம். இந்தநேரத்தில், மதுசூதனன் தேவையில்லாமல் கடிதம் எழுதி பரபரப்பை கிளப்பிவிட்டார்.

அமைச்சரவையிலும் மாற்றம்

அமைச்சரவையிலும் மாற்றம்

ஆகையால் சட்டசபை கூட்டத் தொடர் முடிந்த பிறகு கட்சிப் பதவிகளுக்கு மட்டுமல்லாமல், அமைச்சரவையிலும் பெரும் மாற்றம் வர இருக்கிறது என்கின்றன கோட்டை வட்டாரங்கள். இதில் வலுவான துறையைக் கேட்டுப் பெற இருக்கிறார் ஓபிஎஸ் அணியின் மா.ஃபா.

புதுமுகங்கள் என்ட்ரி

புதுமுகங்கள் என்ட்ரி

அத்துடன் புதியவர்களும் அமைச்சரவைக்குள் வர இருக்கின்றனராம். இதனால் ஆர்கே நகரில் தினகரனின் ஸ்லீப்பர் செல்களாக இருந்து சித்துவேலை காட்டிய அமைச்சர்கள் பீதியில் இருக்கிறார்களாம்.

English summary
Speculations are rife that the Tamilnadu Chief Minister Edappadi Palanisamy Cabinet is up for reshuffle.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X