For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மிரட்டும் தெலுங்கானா, ஆந்திரா.. தமிழகத்தின் தொழில் வளத்துக்கு பேரபாயம்!

Google Oneindia Tamil News

சென்னை: இந்தியாவின் டெட்ராய்ட் என்ற பெரும் பெயரை படு வேகமாக இழந்து கொண்டிருக்கிறது சென்னை என்ற செய்தி காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவது போல வந்து கொண்டிருக்கிறது. இந்த பெயரை சென்னையிடமிருந்து தட்டிப் பறிக்க தெலுங்கானாவும், ஆந்திராவும் படுவேகமாக விரைந்து கொண்டிருக்கின்றன.

சென்னை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழகத்தின் தொழில் துறையுமே கடு்மையான தள்ளாட்டத்தில் உள்ளதாம். ஜிஎஸ்டியால் ஒருபக்கம் இடி என்றால் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களின் வி்ஸ்வரூப போட்டி மறுபக்கம் தமிழக தொழில்துறையை குதறிப் போட்டுக் கொண்டிருக்கிறதாம்.

ஸ்திரமில்லாத அரசியல் தலைவர்கள், கேவலமான அரசியல் சண்டைகள், மக்களைப் பற்றியும், தொழில் வளம் பற்றியும் கவலைப்படாத அரசு இருக்கும் நிலை போன்ற பிற காரணங்களும் கூட இந்த அவலநிலைக்குக் காரணம் என்று சொல்கிறார்கள். ஏற்கனவே பல முக்கிய தொழில்நிறுவனங்கள் தமிழகத்தை விட்டு பிற மாநிலங்களுக்குப் போய் விட்டனவாம்.

மிரட்டும் குஜராத்

மிரட்டும் குஜராத்

பல தொழில்நிறுவனங்கள் குஜராத்துக்கு இடம் பெயர்ந்து வருகின்றனவாம். அவர்களில் ஒருவர் ருச்சாக் கான்டர். இவர் சென்னையில் உள்ள தனது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் நிறுவனத்தை மூடி விட்டார். குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு இடம் பெயரத் திட்டமிட்டு வருகிறாராம். ஜிஎஸ்டியால் இவர் பெரும் அடி வாங்கியவர் ஆவார்.

சென்னை பொலிவிழக்கிறது

சென்னை பொலிவிழக்கிறது

மறுபக்கம் இந்தியாவின் டெட்ராய்ட் என்ற பெயருடன் திகழும் சென்னை அந்தப் பெயரை படு வேகமாக இழக்க ஆரம்பித்துள்ளதாம். ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சென்னையை விட்டு இடம் பெயர ஆரம்பித்துள்ளனவாம்.

ஆந்திரா, தெலுங்காவின் பிரமாண்ட வளர்ச்சி

ஆந்திரா, தெலுங்காவின் பிரமாண்ட வளர்ச்சி

சென்னைக்கு நேரடி சவாலாக இருப்பது ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் வளர்ச்சி என்று பிரபல தொழிலதிபர் வேணு சீனிவாசன் கூறுகிறார். இவற்றின் வளர்ச்சி பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளதாக கூறும் அவர் சென்னைக்கு இவை நேரடி மிரட்டலாக உள்ளதாகவும் சொல்கிறார்.

தள்ளாட்டத்தில் தமிழகம்

தள்ளாட்டத்தில் தமிழகம்

இந்தியாவிலேயே தொழில் ரீதியாக பிரமாண்ட வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் தமிழகம் முக்கியமானது, முதன்மையானது. ஆனால் அந்த புகழை அது வேகமாக இழந்து விடும் அபாயம் அதிகரித்துள்ளது கவலை தருவதாக தொழில்துறையினர் வேதனை தெரிவிக்கின்றனர். அரசியல் ஸ்திரமின்மை, ஜிஎஸ்டி உள்ளிட்ட காரணங்களை அவர்கள் மேற்கோள் காட்டுகின்றனர்.

என்ன செய்யப் போகிறோம்?

English summary
Industrialists opine that TN and Chennai will lose their name and fame to Andhra and Telangana soon as many industrial houses are relocating to AP and Telangana due to various reasons.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X