For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு நாளை 10 மணிக்கு வெளியாகிறது- எஸ்எம்எஸ்ல மார்க் வரும்!

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது. மாணவ, மாணவியர் செல்போன் மூலம் தேர்வு முடிவுகள் தெரிந்து கொள்ளலாம்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: 10 லட்சம் மாணவர்கள் எழுதியயுள்ள பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது. செல்போன் மூலம் தேர்வு முடிவுகள் தெரிந்து கொள்ள தேர்வுத் துறை ஏற்பாடு செய்துள்ளது.

பத்தாம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் 8ம் தேதி தொடங்கி 31ம் தேதி முடிந்தது. தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் 9 லட்சத்து 94 ஆயிரத்து 167 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 4 லட்சத்து 98 ஆயிரத்து 383 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 95 ஆயிரத்து 784 பேர் மாணவியர். இவர்கள் தவிர தனித் தேர்வர்கள் 39 ஆயிரத்து 741 பேரும் எழுதியுள்ளனர். அவர்களில் 25 ஆயிரத்து 769 பேர் மாணவர்கள்.

நாளை எஸ்எஸ்எல்சி ரிசல்ட்

நாளை எஸ்எஸ்எல்சி ரிசல்ட்

பத்தாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் நாளை காலை 10 மணிக்கு தேர்வுத்துறை வெளியிடுகிறது. பத்தாம் வகுப்பு தேர்விலும் மாநில, மாவட்ட அளவிலான முதல் 3 இடங்களுக்கான பட்டியல் வெளியாகாது, கிரேடு முறையில் அறிவிக்கப்படும். என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

இணையதளங்கள்

இணையதளங்கள்

தேர்வு முடிவுகளை

www.tnresults.nic.in

www.dge1.tn.nic.in

www.dge2.tn.nic.in

ஆகிய இணைய தளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

தேர்வு எழுதியுள்ள மாணவ, மாணவியர் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதி மாதம் வருடம் ஆகியவற்றை இணைய தளத்தில் பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எஸ்எம்எஸ் மூலம் மார்க்

எஸ்எம்எஸ் மூலம் மார்க்

பள்ளி மாணவர்கள் அவர்கள் படித்த பள்ளிகளில் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், அவர்கள் குறிப்பிட்டு கொடுத்துள்ள செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவு உடனே அனுப்பி வைக்கப்படும். தனித் தேர்வர்களும் செல்போனில் தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள தேசிய தகவலியல் மையங்கள், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இல்லாமல் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

பள்ளி மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்கள் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றுகளை 25ம் தேதி முதல் www.dge.tn.nic.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அந்தந்த தேர்வு மையங்களிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

English summary
The results of Tamil Nadu SSLC Class 10 results will be declared on May 19 on the official website, the link for which is tnresults.nic.in. As per reports, the results will be declared at 10 am.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X