For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எங்க கிட்ட மோதினா மண்டை உடையும்... ஸ்டாலினுக்கு எடப்பாடியார் எச்சரிக்கை

Google Oneindia Tamil News

திருப்போரூர் : அதிமுக எஃகு கோர்ட்டை. மோதினால் மண்டை உடையும் என திமுக தலைவர் ஸ்டாலினை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படுவற்கு முன்பே தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தை துவக்கி விட்டனர்.

கூட்டணி பேச்சுவார்த்தை ஒரு புறம், எந்த கட்சி எந்த சின்னத்தில் போட்டியிடும் என்ற ஆலோசனை ஒருபுறம், யாருக்கு எத்தனை சீட், யாரை எந்த தொகுதியில் போட்டியிட வைப்பது என்ற பேச்சு ஒருபுறம் என தமிழக அரசியல் களம் பரபரப்பாகி உள்ளது.

 நேற்று சவால், இன்று எச்சரிக்கை :

நேற்று சவால், இன்று எச்சரிக்கை :

எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பிரசாரத்தை துவக்கியது முதல், நாள்தோறும் திமுக தலைவர் ஸ்டாலினை கடுமையாக தாக்கி பேசி வருகிறார். அந்த வரிசையில் நேற்று ஸ்ரீபெரும்புதூர் பிரசாரத்தின் போது, துண்டு சீட்டு இல்லாமல் என்னுடன் விவாதிக்க தயாரா என மீண்டும் சவால் விட்டார்.

 மண்டை உடையும் :

மண்டை உடையும் :

இன்று திருப்போரூர் பிரசாரத்தில் ஸ்டாலினுக்கு பலவிதங்களிலும் எச்சரிக்கை விடுத்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் பிரசாரம் செய்த எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் சொல்வதெல்லாம் பொய். எஃகு கோட்டையான அதிமுகவுடன் மோதினால் மண்டை .உடையும். வீண் பழி சுமுத்தினால் வெளியில் நடமாட முடியாது.

 விடாத திமுக :

விடாத திமுக :

திமுக ஆட்சியில் இல்லாத போதே போலீசாரை உதயநிதி ஸ்டாலின் மிரட்டுகிறார். திமுக வெற்றிபெற்றால், அமைதி பூங்காவாக இருக்கும் தமிழகம், ரவுடி ஆட்சியாக மாறி விடும் என்றார். அதிமுகவுக்கு நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என காட்டும் விதமாக திமுக.,வும் மோதிக் கொண்டிருக்கிறது.

 பதிலடி விமர்சனம்:

பதிலடி விமர்சனம்:

முதல்வர் உள்ளிட்ட அதிமுகவினரின் விமர்சனங்களுக்கு சமூக வலைதளங்களிலும், பேட்டிகளிலும் பதில் தாக்குதல் விடுத்து வருகின்றனர். மொத்தத்தில் தேர்தல் முடியும் வரை தினம் தினம் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்பதே உண்மை.

English summary
TN CM warns DMK Chief if they collide with admk, the skull will break.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X