For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு: மதுவிலக்கு, ஊழல் ஒழிப்பு என 55 வாக்குறுதிகள்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி 55 அம்சங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது.

சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி 41 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்நிலையில் அக்கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று சென்னையில் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல் அறிக்கையை தமிழக தேர்தலுக்கான காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் வெளியிட்டார். அறிக்கையில் ஊழல் ஒழிப்பு, பூரண மதுவிலக்கு உள்பட 55 வாக்குறுதிகள் உள்ளன.

TN congress releases its election manifesto

தேர்தல் அறிக்கையின் சிறப்பு அம்சங்கள்:

விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர் கடன்

தமிழகத்தில் மின் உற்பத்தியை பெருக்க புதிய திட்டங்கள் அறிமுகம்

தமிழகத்தில் மீண்டும் சட்டமேலவை அமைக்கப்படும்

மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்

சூரிய மின்சக்தி பயன்படுத்தும் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம்

சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும்

மாவட்டம் தோறும் நவோதயா பள்ளி துவங்கப்படும்

60 வயதிற்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.2,000 ஓய்வூதியம் வழங்கப்படும்

உழவர் சந்தைகள் விரிவுபடுத்தப்படும்

மெட்ரோ ரயில் சேவை விரிவுபடுத்தப்படும்

சொட்டு நீர் பாசனத்துக்கு 100 சதவீத மானியம் வழங்கப்படும்

நீதித்துறை சீரமைக்கப்படும்

மீனவர் பிரச்சனை தீர்க்கப்படும்

நடிகர் சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டப்படும்

அரசுப்பணியில் திருநங்கைகளுக்கு 2 சதவீத ஒதுக்கீடு

புதிய கல்வி கொள்கை உருவாக்கப்படும்

நதிநீர் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்

சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்

விவசாய கொள்கை விரிவுபடுத்தப்படும்

கூவம் சீரமைப்பு திட்டம் செயல்படுத்தப்படும்

திரையரங்குகளில் கட்டண கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்

ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்

தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை

முதியோர் உதவித்தொகை குறைந்தபட்சம் ரூ.2000

English summary
Congress party has released its election manifesto ahead of TN assembly election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X