For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குட்கா ரெய்டு: நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை.. முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் பரபரப்பு

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    குட்கா ஊழல் குறித்து முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் பரபரப்பு பேட்டி-வீடியோ

    சென்னை: நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் குட்கா ஊழல் குறித்து பேட்டி அளித்துள்ளார்.

    நேற்று முதல்நாள் தமிழகத்தில் சிபிஐ திடீர் என்று ரெய்டு நடத்தியது. அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, உள்ளிட்ட புள்ளிகளின் வீடுகளில் சோதனை நடந்தது.

    சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், தூத்துக்குடி, பாண்டிச்சேரி. பெங்களூரு, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடந்தது. சிபிஐ அதிகாரிகள் 450 பேர் இதில் ஈடுபட்டார்கள். மொத்தம் 35 இடங்களில் சோதனை நடந்தது.

    பேட்டி

    பேட்டி

    டிஜிபி ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இன்னும் சிலர் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்தார்.

    உத்தரவுகள்

    உத்தரவுகள்

    குட்கா விவகாரம் வெடித்துள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.குட்கா ஊழல் குறித்த சிபிஐ சோதனை தொடர்பாக ஜார்ஜ் விளக்கம் அளித்தார். நொளம்பூரிலுள்ள இல்லத்தில் வைத்து ஜார்ஜ் பேட்டி அளித்தார். மதுரை நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது என்று நீதிமன்ற உத்தரவுகளை மேற்கோள் காட்டி ஜார்ஜ் பேட்டி அளித்தார்.

    சிலவற்றை கூற விரும்பவில்லை

    சிலவற்றை கூற விரும்பவில்லை

    அதில், நான் சந்தித்து வரும் பிரச்சனைகளை கூற விரும்பவில்லை. சில நீதிமன்ற மேற்கோள்களை மட்டும் கூற விரும்புகிறேன்.விசாரணையில் இருப்பதால் மேற்கொண்டு தெரிவிக்க விரும்பவில்லை.திமுக எம்.எல்.ஏ அன்பழகன் குட்கா முறைகேடு தொடர்பாக ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.குட்கா உற்பத்தியாளர்களிடம் நான் லஞ்சம் வாங்கியதாக மனுவில் கூறியுள்ளார்.வழக்கில் குறிப்பிட்ட காலகட்டத்தில் நான் சென்னை போலீஸ் கமிஷனராக இல்லை.

    அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை

    அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை

    கிரிமினல்கள் காகிதத்தில் எழுதியதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை.33 ஆண்டுகால அரசு பணியில் நான் எந்த தவறும் செய்யவில்லை.

    தன்னுடைய பெயர் இல்லை

    தன்னுடைய பெயர் இல்லை

    குற்றச்சாட்டில் எங்கும் நேரடியாக என் பெயர் இல்லை.சிபிஐ நேரடியாக எதிலும் என்னை குறிப்பிடவில்லை.சென்னை கமிஷனராக நான் பதவியேற்ற போதே குட்கா ஊழல் பற்றிய தகவல் வந்தது. அப்போது நான் யார் மீது குற்றச்சாட்டு வைக்கவில்லை. நான் உண்மைகளின் அடிப்படையில் மட்டுமே பேசுகிறேன்.

    அப்போதே சோதனை

    அப்போதே சோதனை

    2011ல் இருந்தே குட்கா புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்தினேன்.சில குடோன்களில் சோதனையும் செய்யப்பட்டது.ஆனால் குடோன்களில் எங்கும் புகையிலை பொருட்கள் இல்லை.இதனால் அரசிடம் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டு இருந்தேன், என்றுள்ளார்

    English summary
    TN Ex Police commissioner George will give a press conference today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X