For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டாக்சி மற்றும் தனியார் பேருந்துகளை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை.. தமிழக அரசு அதிரடி முடிவு

தமிழ்நாட்டில் ஓடிக்கொண்டு இருக்கும் டாக்சி மற்றும் தனியார் பேருந்துகளை கண்காணிக்கும் வகையில், கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்து இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் ஓடிக்கொண்டு இருக்கும் டாக்சி மற்றும் தனியார் பேருந்துகளை கண்காணிக்கும் வகையில், கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்து இருக்கிறது.

கடந்த ஜனவரி மாதம் மத்திய போக்குவரத்துத்துறை ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, நாடு முழுக்க பொதுமக்கள் பயன்பாட்டில் இயங்கும் தனியார் வாகனங்களில் வேகக்கட்டுப்பாடு கருவி, ஜிபிஎஸ் ஆகியவை பொறுத்த வேண்டும். இதற்காக கட்டுப்பாட்டு அறை ஒன்றை அமைக்க வேண்டும் என்று கோரி இருந்தது. இதற்கு ஏப்ரல் ஒன்றாம் தேதி வரை அவகாசம் கொடுத்து இருந்தது.

TN government decides to create control centre for taxi and private buses

சாலைகளில் ஏற்படும் விபத்துகளை தடுக்கவும், குற்றச்செயல்களை குறைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் தமிழகம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்கள் இந்த உத்தரவு இன்னும் செயல்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. இந்த நிலையில் தற்போது டாக்சி மற்றும் தனியார் பேருந்துகளை கண்காணிக்கும் வகையில், கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்து இருக்கிறது.

தமிழகத்தில் மொத்தம் 2 லட்சம் வாகனங்கள் இப்படி இயங்கி வருகிறது. இந்த வாகனங்கள் எல்லாற்றிலும் இன்னும் சில நாட்களில் வேகக்கட்டுப்பாடு கருவி, ஜிபிஎஸ் ஆகியவை பொறுத்தப்பட இருக்கிறது. அந்த விவரங்கள் கட்டுப்பட்டு அறை மூலம் சோதிக்கப்படும்.

இதற்கான ஆணை ஆர்டிஓ அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆட்டோக்களை தமிழக அரசு எப்படி கண்காணித்து வருகிறதோ அதேபோல் இதுவும் கண்காணிக்கப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

English summary
Tamilnadu government decides to create control center for taxi and private buses for controlling accidents and criminal activities.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X