For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு!

தமிழக அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை தமிழக அரசு 4 சதவீதம் உயர்த்தியுள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் உள்பட சுமார் 18 லட்சம் பேருக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. அகவிலைப்படி உயர்வு ஜனவரி மாதம் முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

TN government employees will get 4 percent DA hike - CM Edapadi

அகவிலைப்படி உயர்வால் ஆண்டு ஒன்றிற்கு தோராயமாக கூடுதல் செலவாக ரூ. 986.77 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையிலான கூடுதல் தவணை அகவிலைப்படி மே மாத சம்பளத்துடன் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

அகவிலைப்படி உயர்வு மூலம் அரசு ஊழியர்களுக்கு ரூ.244 முதல் 5 ஆயிரத்து 390வரை ஊதிய உயர்வு கிடைக்கும். ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.122 முதல் 3 ஆயிரத்து 80 வரையில் ஊதிய உயர்வு கிடைக்கும்.

English summary
TN cm edappadi palanisamy announced 4 percent DA for goverment employees
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X