For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இருந்து ஹஜ் செல்வோரின் செலவை தமிழக அரசு ஏற்கிறது

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இருந்து ஹஜ் யாத்திரை செல்வோரின் மானியத்தை தமிழக அரசே ஏற்கும் என்ற அறிவிப்பு வெளியிட வாய்ப்புள்ளது.

முஸ்லிம்களின் புனித யாத்திரையான ஹஜ் யாத்திரைக்கு மத்திய அரசு சார்பில் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மானியம் கடந்த சில தினங்களுக்கு முன் ரத்து செய்யப்பட்டது.

TN government has to take care of Haj subsidy

இதனால் முஸ்லிம் சமூகத்தினர் பாதிக்கப்பட்டனர். வாழ்நாளில் ஒரு முறையாவது ஹஜ் யாத்திரை செல்ல விரும்பும் நடுத்தரவாசிகளின் கனவை இந்த மானிய திட்டம்தான் நிறைவேற்றி வருகிறது.

அவ்வாறிருக்கையில் ஹஜ் பயணத்துக்கான மானியத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது கடும் கண்டனத்துக்குள்ளானது. இது தொடர்பாக முதல்வருக்கு ஏராளமான கோரிக்கைகள் வந்த வண்ணம் இருந்தன.

இதை ஏற்று தற்போது நடைபெற்று வரும் சட்டசபை கூட்டத்தொடரில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஹஜ் பயண மானியத்தை தமிழக அரசே ஏற்கும் என்று அறிவிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

English summary
Tamilnadu Government will take care of Haj piligrim's subsidy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X