For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு வேலை: இடஒதுக்கீட்டை 4 சதவீதமாக உயர்வு!

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை : மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் இருக்கும் இடஒதுக்கீட்டை தமிழக அரசு 3 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக அதிகரித்துள்ளது.

மாற்றத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016ன்படி அரசுப் பணியிடங்களில் 4 சதவீதம் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி வெளியிட்டள்ள செய்திக்குறிப்பில்: 1981ம் ஆண்டிலிருந்தே மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இவற்றில் பார்வை குறைபாடுடையோர், செவித்திறன் குறைபாடுடையோர் மற்றும் கை, கால் பாதிக்கப்பட்டோர் ஆகியோர்களுக்கு தலா 1 சதவீதம் பணியிடங்கள் தலா 1 சதவீதம் பணியிடங்கள் ஒதுக்கீடு பெற்று பயன்பெற்று வருகின்றனர்.

 TN government hiked the reservation for disables to 4 % in government jobs

அவர்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்க கேட்டுக் கொண்டதன் பேரில் இடஒதுக்கீடு 4 சதவீதமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
இதன்படி பார்வைகுறைபாடுடையோர், செவித்திறன் குறைபாடுடையோருக்கு 1 சதவீத இடஒதுக்கீடும், கை, கால் பாதிக்கப்பட்டோர், அறிவுசார் குறைபாடுடையோர் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகளில் பாதிக்கப்பட்டோருக்கு 1 சதவீதம் என இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இந்த 4 சதவீத இடஒதுக்கீடானது அனைத்து அரசுப் பணியிடங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள். உள்ளாட்சி அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், அரசு உள்ளாட்சி அமைப்புகள், அரசின் நிதிஉதவி பெறும் அமைப்புகள் ஆகியவற்றிற்கும் பொருந்தும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
TN CM Palanisamy hike the reservation for disables in government and government aided institutuion job oppurtunities to 4 percentage
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X