For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இமானுவேல் சேகரன், வீரன் சுந்தரலிங்கம் வரலாற்றை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்: கிருஷ்ணசாமி

இமானுவேல் சேகரன், வீரன் சுந்தரலிங்கம் வரலாற்றை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

மதுரை : சுதந்திரப் போராட்ட வீரர்களான இமானுவேல் சேகரன், வீரன் சுந்தரலிங்கம் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை பாடத்திட்டத்தில் சேர்க்காமல் இருட்டடிப்பு செய்யக்கூடாது என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மதுரையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசுகையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய புதிய தமிழகம் கட்சி குரல் கொடுத்தது. இதற்காக மத்திய, மாநில அரசுகளை பாராட்டுகிறேன்.

TN Government is not functioning says Krishnaswamy

தமிழக பள்ளிக்கல்விப் பாடத்திட்டத்தில் அனைத்து தலைவர்களும் முக்கியத்துவம் தரப்பட வேண்டும். சுதந்திர போராட்டத் தியாகி இமானுவே சேகரன், வீரன் சுந்தரலிங்கரம் ஆகியோரின் வரலாறுகளை இருட்டடிப்பு செய்யக்கூடாது.

இதனை வலியுறுத்தி வருகிற 4ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தமிழ் உணர்வுவை வளர்த்தல் எவ்வளவு முக்கியமோ அதே போல் சாதிய ஒழிப்பு பிரசாரத்தையும் மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் எடப்பாடி அரசு செயல்படாத நிலையில் உள்ளது. அதனால், ஆளுநர் ஆய்வு நடத்தி அரசு இயந்திரத்தை செயல்பட வைக்க வேண்டிய நிலை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

English summary
TN Government is not functioning says Krishnaswamy. Puthiya Thamizhagam Party Leader Krishnaswamy condemns TN Government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X