For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூ.500-க்கு வங்கி கணக்கு தொடங்கினால் ரூ.5 ,10-க்கு பயிர் காப்பீடு செக்: ஆதாரத்துடன் அவையில் விவாதம்

பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் விவசாயிகளுக்கு ரூ, 5, ரூ.10-க்கு காசோலை வழங்குவதாக சட்டசபையில் திமுக குற்றம்சாட்டியது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    ரூ.500-க்கு வங்கி கணக்கு தொடங்கினால் ரூ.5 ,10-க்கு பயிர் காப்பீடு செக்- வீடியோ

    சென்னை: பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இழப்பீடாக ரூ. 5, ரூ.10 தொகையை காசோலையாக வழங்குவதாக சட்டசபையில் ஆதாரத்துடன் திமுக குற்றம்சாட்டியது.

    பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் பயிர் சேதமடைந்த விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படுகிறது. இதற்காக அவர்கள் ரூ. 500 கொடுத்து வங்கிக் கணக்கு துவங்கினால் பயனாளிகளின் கணக்குகளுக்கு அந்த தொகை வந்து சேர்ந்துவிடும்.

    திண்டுக்கல், நாகப்பட்டினம் மாவட்டங்களில் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகையாக ரூ. 3, 4, 5, 10 ஆகியன காசோலைகளாக வழங்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

     பார்வைக்கு

    பார்வைக்கு

    பட்ஜெட் மீதான விவாதத்தின் போது நேற்று இதுகுறித்து சட்டசபையில் திமுக எம்எல்ஏக்கள் கேள்வி எழுப்பினர். அப்போது எம்எல்ஏ பிச்சாண்டி ரூ.5, ரூ.10-என வழங்கப்பட்ட சில காசோலைகள் அவையின் பார்வைக்கு கொண்டு வந்தார்.

     ஆட்சியர் கவனத்துக்கு

    ஆட்சியர் கவனத்துக்கு

    இதை பார்த்த அமைச்சர்கள் காசோலைகளால் சில பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதை ஒப்புக் கொண்டுள்ளனர். இதுகுறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில் திண்டுக்கல் மற்றும் நாகை மாவட்டத்திலிருந்து இதுபோன்ற புகார்களை பெற்றோம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம் என்றார்.

     விரைவில் சரி செய்யப்படும்

    விரைவில் சரி செய்யப்படும்

    தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு கூறுகையில் இந்த விவகாரம் விரைவில் சரி செய்யப்படும். பயிர் காப்பீடு தொகை வழங்குவதில் தமிழகம் முன்னணி மாநிலமாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

     விரைவில் தீர்வு

    விரைவில் தீர்வு

    இது முழுக்க முழுக்க எழுத்து பிழையாகும். இது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். இது போன்ற பிரச்சினைகள் 2 முதல் 3 சதவீத விவசாயிகளே சந்தித்துள்ளனர். வரும் ஏப்ரல் 15-ஆம் தேதிக்குள் இவை தீர்க்கப்படும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.

    English summary
    DMK MLAs raised the issue in Assembly that farmers had received crop insurance cheques for as little as ₹3, ₹4, ₹5 and ₹10 in many parts of the State.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X