For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் பந்த்: ஊழியர்கள் அனைவரும் பணிக்கு வர போக்குவரத்து துறை உத்தரவு

தமிழகத்தில் இன்று வேலைநிறுத்த போராட்டம் நடைபெறுவதால் ஊழியர்கள் அனைவரும் பணிக்கு வர வேண்டும் என்று போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகம் முழுவதும் கடைகள் மூடல்! போக்குவரத்து துறை உத்தரவு

    சென்னை: தமிழகத்தில் இன்று வேலைநிறுத்த போராட்டத்துக்கு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் விடுப்பில் சென்ற பணியாளர்களும் பணிக்கு திரும்ப வேண்டும் என்று போக்குவரத்து துறை உத்தரவை பிறப்பித்துள்ளது.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தில் திமுக இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது.

    TN government orders transport workers to be in work

    அதன்படி இன்று பந்த் காலை 6 மணி முதல் தொடங்கியது. இதற்கு பெரும்பாலான கடைகள் ஒத்துழைப்பு நல்கியுள்ளன. இதற்கு போக்குவரத்து தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்தன.

    தமிழகத்தில் பேருந்துகள் மிக குறைவாகவே இயக்கப்படுகின்றன. எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவாக வேலைநிறுத்தம் செய்ய போவதாக சில தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள நிலையில், ஊழியர்கள் அனைவரும் பணிக்கு வர போக்குவரத்துத்துறை உத்தரவுவிட்டுள்ளது.

    TN government orders transport workers to be in work

    அப்படி மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விடுப்பில் சென்ற பணியாளர்களும் இன்று கட்டாயம் பணியில் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    English summary
    Tamilnadu government orders transport workers to cancel their leaves and should be present in duty today as DMK calls for bandh.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X