For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக சட்டசபையில் தாக்கலானது லோக் ஆயுக்தா மசோதா.. சிறப்பம்சங்கள் என்ன?

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    சட்டசபையில் லோக் ஆயுக்தா தாக்கல்..அனைத்து கட்சிகளும் ஆதரவு!- வீடியோ

    சென்னை: தமிழக சட்டசபையில் லோக் ஆயுக்தா மசோதா தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மசோதா மிகவும் வலிமையாக வடிவமைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தமிழக சட்டசபை கூட்டதொடரில் கடைசி நாளான இன்று லோக் ஆயுக்தா மசோதா வெற்றிகரமாக தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.இந்த சட்டத்தின் படி முதல்வரையும் விசாரிக்க முடியும்.இந்த லோக் ஆயுக்தா மசோதாவை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார். எதிர்க்கட்சிகள் யாரும் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

    TN government passes Lokayukta bill: What are the Alpha and Omega rules!

    18ஆவது மாநிலமாக தமிழகத்தில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த குழுவிற்கு நிறைய அதிகாரங்கள் உள்ளது.

    • ஊழல் குற்றங்கள் குறித்து விசாரிக்கும் தன்னிச்சையான அமைப்புதான் லோக் ஆயுக்தா அமைப்பு.
    • ஒரு ஊழல் புகாரை இந்த அமைப்பு விசாரிக்கிறது என்றால் அதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை, தேர்தல் சமயத்தில் தேர்தல் ஆணையம் எப்படி முழு அதிகாரம் படைத்ததோ அதேபோல் ஊழல் குற்றங்களில் இந்த அமைப்பிற்கு அதிகாரம் உள்ளது.
    • ஆளுநரின் அனுமதி பெறாமலே குற்றஞ்சாட்டப்பட்டவர் மீது விசாரணை நடத்த லோக் ஆயுக்தாவுக்கு உரிமை இருக்கிறது.
    • லோக் ஆயுக்தா மசோதா நிறைவேற்றப்பட்டால், உடனடியாக இதற்கான குழு உருவாக்கப்பட வேண்டும். இதற்கான தலைவர்கள், மற்றும் உறுப்பினர்களை, ஆளுநர் நியமிக்கும் அதிகாரம் உள்ளது. இதற்காக உறுப்பினர்களை பரிந்துரை செய்யும் குழுவும் அமைக்கப்படும்.
    • பொதுவாக முன்னாள் உயர்நீதிமன்ற, செஷன்ஸ், கூடுதல் செஷன்ஸ் நீதிபதிகள், இதன் தலைவர்களாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. இவர்களை யாரும் குறுக்கிட முடியாது. இவர்கள் கட்டுப்பாட்டில் செயல்படும் போலீசார் யாரைவேண்டுமானாலும் கைது செய்ய முடியும்.
    • இந்த மசோதாவின் படி, இந்த சட்ட வரம்பிற்குள் முதல்வரும் வருகிறார். இதனால் இந்த சட்டத்தின் படி முதல்வரையும் விசாரிக்க முடியும். அதேபோல் அமைச்சர்கள், அதிகாரிகளையும் விசாரிக்க முடியும். மேலும் இதில் விசாரிக்கப்படுபவர்களின் பெயர்கள் பொதுவில் வெளியிடப்படும்.
    • இதில் குற்றம் உண்மைதான் என்று ஆரம்பத்தில் அறிகுறிகள் தெரிந்தாலே பதவியை பறிக்கவும் , சொத்துக்களை முடக்கவும் முடியும். முதல்வர் பதவியை கூட முடக்க முடியும். இதை எந்த நீதிமன்றமும் தடுக்க முடியாது.
    • இதில் சாட்சியம் கிடைத்த பின், விசாரணையை எப்போதும்போல நீதிமன்றத்திற்கு அனுப்பப்படும். ஆனால் லோக் ஆயுக்தா அனுப்பும் வழக்குகள் விரைவில் விசாரிக்கப்படும்.
    • முன்னாள் பணியாளர்கள் குற்றம் செய்தது தெரிய வரும் பட்சத்தில் அவர்களின் பென்ஷனை நிறுத்திவைப்பதென்று சில அதிரடி துறை ரீதியான நடவடிக்கைகளை செய்ய முடியும்.

    English summary
    Tamil Nadu government passes Lokayukta bill. The government says that it was designed as the one of the strongest bills to act against corruption.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X