For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் கூகுள் கிளை அமையுமா? முடிவு சுந்தர்பிச்சை கையில் - சட்டசபையில் அமைச்சர் தகவல்

தமிழகத்தில் கூகுளின் கிளை அலுவலகத்தை திறக்க பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் மணிகண்டன் கூறியுள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை: தேடல் களஞ்சியமான கூகுள் பல்வேறு வேலைவாய்ப்புகளை வழங்கி வருவதால் தமிழகத்தில் அதன் கிளையை திறக்க வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

அமரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட கூகுள் ஒரு மிகச்சிறந்த தேடல் களஞ்சியமாக உள்ளது. உலகின் எல்லாத் தகவல்களையும் ஒருங்கிணைத்து அளிப்பதே கூகுளின் நோக்கமாகும்.

உலகம் முழுதும் ஒரு மில்லியனுக்கும் மேலான தரவு மையங்களைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் கூகுள் ஒரு நாளில் ஒரு பில்லியனுக்கும் மேலான தேடல்களைக் கையாள்கிறது. இணைய யுகத்தில் மிகப்பெரும் வளர்ச்சியை கண்டுள்ள கூகுள் இணையத் தேடலுடன், கூகுள் டாக்குமெண்டுகள், கூகுள் பிளஸ், கூகுள் டாக், கூகுள் மேப், கூகுள் நியூஸ், பிளாக்கர், யூ டுயூப் போன்ற பல்வேறு சேவைகளையும் வழங்கி வருகிறது.

நான்கு நகரங்கள்

நான்கு நகரங்கள்

மென்பொருள் பொறியியல், இணைய முன்னேற்றங்கள். தொழில்நுட்ப பிரச்னைகளைக் கையாள்வது, விற்பனை மற்றும் வாடிக்கையாளர்களின் கணக்குகளை பராமரிக்கது எனற் பல்வேறு வேலைவாய்ப்புகளை கூகுள் வழங்கி வருகிறது. அமெரிக்காவில் தலைமையிடம் இருந்தாலும் இந்தியாவைப் பொருத்த வரை பெங்களூரு, மும்பை, குர்கான், ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் கூகுள் சிளை அலுவலகங்கள் செயல்படுகின்றன.

இந்திய பயனாளர்கள்

இந்திய பயனாளர்கள்

கூகுளின் தரவுகளைப் பயன்படுத்துபர்வகளில இந்திய இணையப் பயனீட்டாளர்களே 80 சதவீதம் உள்ளனர். இதனால் இந்திய சந்தையை குறி வைத்தே கூகுள் நிறுவனம் பல தனது தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் கூகுள் கிளையில் தமிழகத்தில் தொடங்க கோரிக்கை விடப்பட்டுள்ளதாக அமைச்சர் மணிகண்டன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கிளை

தமிழகத்தில் கிளை

சட்டசபையில் இது குறித்து பேசிய தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் கூகுள் செயல்தலைவர் சுந்தர் பிச்சையுடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சென்னை அல்லது மதுரையில் கூகுள் கிளை அலுவலகத்தை அமைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

நல்ல வாய்ப்பு

நல்ல வாய்ப்பு

சென்னை அல்லது மதுரையில் கூகுள் கிளை அமையும் பட்சத்தில் கூகுளில் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறும். மேலும் சாப்ட்வேர் துறையில் சாதிக்க நினைப்பவர்ளுக்கும் பல்வேறு வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் கூகுள் ஆட்களைச் பணியில் அமர்த்த கடுமையான சோதனைகளை நடத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

English summary
Tn ministerManikandan said in assembly that request is given to Google CEo Sundarpichai to open a google branch neither in Chennai nor Madurai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X