For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி: மத்திய அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர வேண்டும் - ஜி.ஆர்

உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காத மத்திய அரசு மீது உடனடியாக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர வேண்டும் என்று ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

தஞ்சாவூர் : காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத மத்திய அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் செயலாளரும், அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான ஜி.ராமகிருஷ்ணன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

TN Government should file case on Central Government says GR

அப்போது அவர் பேசுமையில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசின் ஓராண்டு நிறைவு விழா நாளை கொண்டாடப்படுவதாக செய்தி வந்துள்ளது. இந்த ஓராண்டில் வேதனையும், சோதனையும் தான் நடந்தது.

இதற்கு எதற்கு விழா கொண்டாடுகிறார்கள் என்பது தெரியவில்லை. மார்ச் 31ந் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியும் மத்திய மாநில அரசும் கண்டுகொள்ளாமல் உள்ளது.

திடீரென பேருந்து கட்டண உயர்வு மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது, பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்தில் ஊழல். சாதி ஆவண கொலையால் 187 பேர் கொலை என தமிழகத்தில் அவலங்கள் தொடர் கதையாக உள்ளது.

சட்டம் ஒழுங்கை சரிவர கவனிக்காததால், மாநிலத்தில் தொடர் கொலை மற்றும் கொள்ளைகள் பெருகியுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் கல்வியின் தரம் குறைந்துள்ளது. இதனால் அரசு பள்ளிகளில் இருந்து தனியார் பள்ளிகளுக்கு அதிக அளவில் மாணவர்கள் செல்கின்றனர்.

கடந்த கல்வியாண்டில் மற்றும் கிராமப்புறங்களில் செயல்பட்டு வந்த அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் தமிழகம் கல்வியில் மிகவும் பின் தங்கிய நிலையை அடையும் என்பது வருத்தத்தை அளிக்கிறது.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி ஆகிய நான்கு மாவட்டங்களில் அடுத்த மாதம் 5,6 ஆகிய தேதிகளில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசின் மீது மாநில அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

English summary
TN Government should file case on Central Government says CPIM Former state secretary G Ramakrishnan. He also added that, Tamilnadu Government not even care about the Cavery issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X