For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முதல்வரையும் விசாரிக்கலாம்.. தமிழக சட்டசபையில் நிறைவேறியது லோக் ஆயுக்தா மசோதா!

தமிழக சட்டசபை கூட்டதொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    சட்டசபையில் லோக் ஆயுக்தா தாக்கல்..அனைத்து கட்சிகளும் ஆதரவு!- வீடியோ

    சென்னை: தமிழக சட்டசபை கூட்டதொடரில் கடைசி நாளான இன்று லோக் ஆயுக்தா மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.இந்த சட்டத்தின் படி முதல்வரையும் விசாரிக்க முடியும்.

    பல்வேறு பரபரப்புகளுக்கு இடையில் தமிழக பட்ஜெட் சட்டசபை கூட்டத்தொடர் முடிவிற்கு வந்துள்ளது. இந்த நிலையில் கடைசி நாளான இன்று, சட்டசபையில் ஊழலுக்கு எதிரான லோக் ஆயுக்தா மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

    TN government will pass Lokayukta bill in assembly today

    லோக் ஆயுக்தா தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் விதித்த கெடு விதித்து இருந்தது. பெரும்பாலான மாநிலங்கள் இந்த மசோதாவை தாக்கல் செய்தது. இந்த நிலையில் நீதிமன்றம் விதித்த கெடு நாளையுடன் முடிகிறது.

    கடந்த வாரம் நடைபெற்ற கூட்டத்தின் போதே துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இந்த நடப்பு கூட்டத் தொடரிலேயே லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வரப்படும் என்று திமுக உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். இதனால் இன்றைய கூட்டத்தொடர் முக்கியத்துவம் பெற்றது.

    மே 29-ஆம் தேதி தொடங்கிய நடப்பு சட்டசபை கூட்டத்தொடர், இன்றுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த லோக் ஆயுக்தா மசோதாவை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார். எதிர்க்கட்சிகள் யாரும் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

    மசோதா மீது இன்று மதியம் விவாதம் நடைபெற்றது. இதில் இடம்பெற கூட சட்ட பிரிவுகள், எப்படிப்பட்ட சட்டங்களை இதில் கொண்டு வரலாம் என்று விவாதிக்கப்பட்டது,. இந்தியாவில் இதுவரை 17 மாநிலங்களில் இந்த மசோதாவை நிறைவேற்றி உள்ளது. தமிழகத்தில் 18ஆவது மாநிலமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இந்த மசோதாவின் படி, இந்த சட்ட வரம்பிற்குள் முதல்வரும் வருகிறார். இதனால் இந்த சட்டத்தின் படி முதல்வரையும் விசாரிக்க முடியும். அதேபோல் அமைச்சர்கள், அதிகாரிகளையும் விசாரிக்க முடியும். மேலும் இதில் விசாரிக்கப்படுபவர்களின் பெயர்கள் பொதுவில் வெளியிடப்படும்.

    English summary
    Today is the last day of this session in Tamilnadu Assembly. TN government will pass Lokayukta bill in assembly today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X