For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"தல" அஜீத்தும், அப்துல் கலாம் விருது பெற்ற தக்ஷாவும்.. ஒரு சுவாரஸ்ய பின்னணி!

அஜீத் ஆலோசகராக இருக்கும் தக்‌ஷா குழுவிற்கு விருது கிடைத்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் அஜீத் - அடிப்படையிலேயே சிறந்த திறமைசாலி. தொழில்நுட்பம் மீது அதிக காதல் உடையவர்.

சின்ன வயசிலிருந்தே அவருக்கு கார், பைக் ஓட்டுவது மீது ரொம்ப ஆசை. இவர் ஸ்கூல் படிக்கும் காலத்திலேயே ஏரோ மாடலிங் தயாரிப்பு என்றால் தனி ஈர்ப்புதான். அதிலேயே மூழ்கிவிடுவாராம்.

நாளடைவில் ஹெலிகாப்டர் ஒட்டுவது, ஆள் இல்லா குட்டி விமானங்களை ஓட்டுவதை கற்றுக் கொண்டு கலக்கினார். அது மட்டுமா, பைக் ரேசிங், கார் ரேசிங் என ஒன்றையும் இவர் விட்டு வைக்கவில்லை. றெக்கை கட்டி பறப்பதுதான் இவருக்கு ஆசையே. அது வானில் பறக்கும் வாகனமானாலும் சரி, அது ரோட்டில் வேகமாக செல்லும் வாகனமானாலும் சரி... காற்றிலே பறந்து வண்டியை ஓட்டி அசத்தி விடுவார்.

தக்‌ஷா பங்கேற்க போகிறது

தக்‌ஷா பங்கேற்க போகிறது

இந்த நிலையில், சென்னை எம்ஐடி தொழில்நுட்ப பிரிவு மாணவர்கள் குழு, தக்ஷா என்ற பெயரில் ஒரு போட்டியில் கலந்து கொள்ள போவதாக அஜீத் காதில் தகவல் விழுந்தது. இந்த போட்டி ஆஸ்திரேலியாவில் செப்டம்பர் மாதம் நடக்கிறது. மொத்தம் 55 நாடுகள் இந்த போட்டியில் கலந்து கொள்கின்றன. தக்ஷாவும் கலந்து கொள்ள போகிறது. போட்டி என்னவென்றால், ஆள் இல்லா குட்டி விமானம் 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒருவரின் ரத்த மாதிரியை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்துவிட வேண்டும். இதுதான் அந்த போட்டி.

விரைவு பயணம்

விரைவு பயணம்

அதுமட்டுமல்ல, இந்த ஆள் இல்லா குட்டி விமானத்தின் பயன் என்ன தெரியுமா? பல பேரின் உயிரை விரைவாக காப்பாற்ற முடியும். எப்படி என்றால் உடல் உறுப்புகளை கொண்டு செல்ல சாலை வழியே சென்றால் மணிக்கணக்காகும். ஆனால் ஆளில்லா விமானம் மூலம் 10 அல்லது 20 நிமிடத்திலேயே கொண்டு செல்லலாம் என கூறப்படுகிறது.

சம்பளமே வேண்டாம்

சம்பளமே வேண்டாம்

இந்த போட்டியை கேள்விப்பட்ட அஜீத், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திடம், எம்ஐடி மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குகிறேன் என்றும் அவர்களுக்கு தொழில்நுட்ப உதவிகளை கூட தாம் தயாராக இருப்பதாகவும் கூறினார். அதனை ஏற்ற நிர்வாகமும், "சரி... முறைப்படி விண்ணப்பித்து சேர்த்து கொள்கிறோம். உங்களுக்கு என்ன சம்பளம் வேண்டும்" என்று கேட்டார்கள். அதற்கு அஜீத், "எனக்கு சம்பளமே வேண்டாம். அப்படி எனக்கு சம்பளம் தர வேண்டுமென்று நீங்கள் விரும்பினால், அதை ஏழை மாணவர்களின் கல்வி உதவிக்காக கொடுத்து விடுங்கள்" என்றார் அஜீத்.

அப்துல்கலாம் விருது

அப்துல்கலாம் விருது

இதனை தொடர்ந்து, மாணவர்களுக்கு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் பயிற்சியையும் சளைக்காமல், சலிக்காமல் வழங்கி வருகிறார். அஜீத் ஆலோசகராக இருக்கும் இந்த தக்ஷா குழுவிற்குதான் இன்று விருது கிடைத்துள்ளது. அதுவும் நடப்பாண்டுக்கான "அப்துல் கலாம் விருது". இதனால் எம்ஐடி மாணவர்கள் அளவு கடந்த மகிழ்ச்சியில் உள்ளனர். அதைவிட உச்சக்கட்ட குஷியில் கொண்டாட்டமாக உள்ளனர் நம்ம தல ரசிகர்கள்.

English summary
TN govs Abdul Kalam Award for Ajith's Dhaksha Team
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X