For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வர்தா புயல் எதிரொலி.. வீட்டிலிருந்து வேலை பார்க்க ஐடி ஊழியர்களை அனுமதிக்க தமிழக அரசு உத்தரவு #Vardah

வர்தா புயல் காரணமாக வீட்டிலிருந்து பணியாற்ற ஐடி ஊழியர்களை அனுமதிக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: வர்தா புயல் நாளை சென்னை அருகே கரையைக் கடக்கவிருப்பதால் தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு விடுமுறை அல்லது வீட்டிலிருந்தே பணியாற்றும் அனுமதியை வழங்குமாறு தனியார் நிறுவனங்களை தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் தொழில் மற்றும் வேலைவாய்ப்புத் துறை செயலாளர் பி. அமுதா வெளியிட்டுள்ள உத்தரவில், வர்தா புயல் எதிரொலியாக, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மற்றும் விழுப்புரம் மாவட்டத்தின் சில தாலுகாக்களில் மழையால் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது.

TN govt asks IT firms to declare work from option to their staffs

எனவே இதைக் கருத்தில் கொண்டு தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு 12ம் தேதியன்று விடுமுறை சலுகை அல்லது வீட்டிலிருந்து பணியாற்றும் அனுமதியை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

ஐடி நிறுவனங்கள் நாளை விடுமுறை விட வாய்ப்பில்லை, அதேசமயம், வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதி தரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
TN govt has asked the IT firms in Cheiian, Kanchipuram, Thiruvallur dts to declare work from option to their staffs due to the cyclone Vardah.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X