For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கரண்ட் கம்பியை உயர்த்தி உயர்த்தி.. சபாஷ் கண்டக்டர்.. வாழ்த்திய பயணிகள்.. வேதாரண்யத்தில் பலே சம்பவம்!

உயிரை பணயம் வைத்து பயணிகளை பாலமுருகன் என்பவர் காப்பாற்றியுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    சபாஷ் கண்டக்டர் பாலபைரவன்.. வாழ்த்திய பயணிகள்.. வீடியோ

    வேதாரண்யம்: ஜனங்கள காப்பாத்தணும்னு முடிவு பண்ணிட்டா, இவர் பேச்சை இவரே கேட்க மாட்டாரு போல இருக்கு!

    மனித குலத்தை வாழ வைப்பவர்கள் எங்கோ மூலையில் மக்களோடு மக்களாக கலந்து கிடப்பார்கள். ஆனால் சந்தர்ப்பமும், சூழ்நிலைகளும்தான் அவரின் மனிதாபிமானத்தையும், குணத்தையும் வெளி உலகுக்கு எடுத்து வந்து காட்டுகிறது.

    அப்படித்தான் கஜா மூலம் நமக்கு தெரியவந்திருக்கிறார். அவர் பெயர் பாலபைரவன் ஆகும். இவர் ஒரு அரசு பஸ் கண்டக்டர்!

    விடிய விடிய மழை

    விடிய விடிய மழை

    கஜாவால் நிறைய பாதிக்கப்பட்டது நாகைதான். ஊரெல்லாம் மரங்கள் முறிந்து விழுந்து கிடக்கின்றன. கரண்ட் கம்பங்கள் சாய்ந்து விழுந்துள்ளன. செல்போன் டவர்கள் வளைந்து நெளிந்து செயலிழந்து உள்ளன. இதனால போக்குவரத்து பெரும் பாடாகிவிட்டது. இதில் நேற்றிரவு எல்லாம் விடிய விடிய மழை பெய்ததால், நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது.

    அரசு பஸ்

    அரசு பஸ்

    ஏற்கனவே நாகையில் அரசு, தனியார் பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில்,சென்னையிலிருந்து வேதாரண்யத்துக்கு அரசு பஸ் சென்றது. அந்த பஸ்ஸின் கண்டக்டர் தான் பாலபைரவன். சென்னையிலிருந்து எந்த பிரச்சனையும் இல்லாமல்தான் பஸ் சென்றது. ஆனால்

    கண்டக்டர் பாலபைரவன்

    கண்டக்டர் பாலபைரவன்

    நாகையை நெருங்கும்போதுதான் ஆபத்து அதிகமானது. வேதாரண்யத்தில் ஈசிஆர் சாலையில் பஸ் நுழைந்தது. வழியெல்லாம் கரண்ட் கம்பிகள் அறுந்துக் கிடந்தன. மரங்கள் குறுக்கே விழுந்து கிடந்தன. இதையெல்லாம் சமாளித்துதான் வண்டி போனது. ஆனால் ஒரு இடத்தில் பஸ் போக முடியாத அளவுக்கு கரண்ட் கம்பி கீழே கிடந்தது. அந்த கம்பியை தாண்டி போகவே முடியாத நிலை. அதனால் கண்டக்டர் கீழேஇறங்கிவிட்டார்.

    கரண்ட் கம்பிகள்

    கரண்ட் கம்பிகள்

    சுற்றிமுற்றிலும் பார்த்து, ஒரு மரக்கிளையை தூக்கி வந்தார். அந்த மரக்கிளை மழை பெய்ததில் முழுசா ஈரமாக இருந்தது. அதை வைத்து, அந்த கரண்ட் கம்பியை தூக்கி பிடித்து நின்றார். அந்த கேப்பில் பஸ் நகர்ந்து சென்றது. இப்படி ஒரு இடம் இல்லை... வழியெல்லாம் அறுந்த கிடந்த கரண்ட் கம்பியை இப்படியே தூக்கி தூக்கி உயர்த்தி பிடிக்க, பஸ் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து சென்று கடைசியில் வேதாரண்யம் வந்து சேர்ந்தது.

    குவியும் பாராட்டுக்கள்

    குவியும் பாராட்டுக்கள்

    கம்பியில் கரண்ட் மட்டும் இருந்திருந்தால் பயணிகளின் நிலைமை என்ன ஆகியிருக்குமோ தெரியாது. தன் உயிரையும் பணயம் வைத்து பயணிகளை காப்பாற்றிய இந்த கண்டக்டரின் இந்த காரியம் வீடியோவாக வைரலாகி வருகிறது. கூடவே கண்டக்டருக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.

    English summary
    TN Govt. Bus Conductor Balamurugan help the people in Vedaranyam
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X