For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏழைகளுக்கு 300 சதுர அடியில் தனி வீடு; 400 சதுர அடியில் அடுக்குமாடி குடியிருப்பு: ஜெ., அதிரடி உத்தரவு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மூலம் 23,476 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தனி வீடுகள் கட்டுவதற்கு முதல்வர் ஜெயலலிதா அனுமதி வழங்கியுள்ளார். அந்த அடுக்குமாடி குடியிருப்புகள் ஒவ்வொன்றும் 400 சதுர அடியிலும், தனி வீடு 300 சதுர அடியிலும் கட்டப்படும் என்றும் தமிழக அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனி வீடுகள் கட்டிக் கொள்பவர்களுக்கு அரசு மானியமாக 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

"சென்னை மற்றும் பிற நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தனி வீடுகள் ஆகியவற்றை தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் கட்டி வருகிறது. கடந்த ஐந்தாண்டுகளில், பல்வேறு திட்டங்களின் கீழ் 59,023 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தனி வீடுகள் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் கட்டியுள்ளது. மேலும், 3,024 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் 7,513 தனி வீடுகள் என 10,537 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

TN govt to construct 23,476 houses for poor people

இந்த ஆண்டு, குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மூலம் 23,476 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தனி வீடுகள் கட்டுவதற்கு முதல்வர் ஜெயலலிதா அனுமதி வழங்கியுள்ளார்.

இதில் 7,204 அடுக்குமாடி குடியிருப்புகள் சென்னை, தஞ்சாவூர், திருச்சி, ஈரோடு, கோயம்புத்தூர், புதுக்கோட்டை, நாமக்கல் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் கட்டப்படும்.

பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு, அவர்களது சொந்த வீட்டுமனைகளில் சென்னை, வேலூர், ஓசூர், ராணிப்பேட்டை, விருதுநகர், மதுரை மற்றும் 157 பேரூராட்சிகளில் 16,272 தனி வீடுகளும் கட்டப்படும்.

அடுக்குமாடி குடியிருப்புகள் ஒவ்வொன்றும் 400 சதுர அடி கட்டடப் பரப்பில் ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையலறை, பால்கனி, குளியலறை மற்றும் கழிவறை ஆகியவற்றை கொண்டதாக அமையும்.

தனி வீடுகள் ஒவ்வொன்றும் 300 சதுர அடி தரைப் பரப்பளவில் பயனாளிகள் தாங்களாகவே கட்டிக் கொள்ள வழிவகை செய்யப்படும். தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம், தேவையான தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை வழங்கும்.

தனி வீடுகள் கட்டிக் கொள்பவர்களுக்கு அரசு மானியமாக 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

English summary
Tamil Nadu Chief Minister J Jayalalithaa today announced construction of 23,476 apartments and individual houses through the Slum Clearance Board for people from economically weaker sections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X