For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக அரசுக்குப் பெரும் பின்னடைவு.. அடுத்தடுத்து சிபிஐக்கு போகும் முக்கிய வழக்குகள்!

Google Oneindia Tamil News

Recommended Video

    முதல்வர் பழனிச்சாமி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்..

    சென்னை: தமிழக அரசு அடுத்து பெரும் பின்னடைவுகளை கோர்ட்டில் சந்தித்து வருகிறது. சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான வழக்கு சிபிஐ வசம் போன நிலையில் தற்போது முதல்வர் மீதான புகாரும் சிபிஐக்குப் போயிருப்பது அதிர வைத்துள்ளது.

    தமிழக அரசு அடுத்தடுத்து பெரும் சரிவுகளையும், அடியையும் சந்தித்து வருகிறது. நீதிமன்றங்களில் தமிழக அரசு சரமாரியாக பின்னடைவுகளை சந்தித்து வருகிறது. பல்வேறு வழக்குகளில் தமிழக காவல்துறை பின்னடைவுகளைச் சந்தித்து வரும் நிலையில் தற்போது அரசின் உயர் மட்ட அளவில் பின்னடைவுகள் ஏற்படத் தொடங்கியுள்ளன.

    TN govt faces big setback

    [முதல்வர் பழனிச்சாமி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு ]

    தமிழக அரசு சமீப காலமாக சந்தித்து வரும் சில சரிவுகள்:

    • அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.
    • சிலைத் திருட்டு வழக்குகளை சிபிஐக்கு மாற்றம் செய்த தமிழக அரசின் உத்தரவு ஹைகோர்ட்டில் ரத்து
    • பல்வேறு சமூகப் போராளிகள் மீது தேச துரோகம் வழக்கு செய்து அவை அனைத்தும் நீதிமன்றங்களில் தள்ளுபடி
    • 8 வழிச் சாலைத் திட்டத்தை மேற்கொள்ள இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது
    • முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான ஊழல் வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

    அடுத்தடுத்து தமிழக அரசு இதுபோல நீதிமன்றங்களில் சரிவுகளைச் சந்தித்து வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Major cases are being handed over to the CBI in Tamil Nadu as the Police probes are facing the ire of the Madras HC.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X