For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீட்: உச்சநீதிமன்ற உத்தரவை மறு ஆய்வு செய்ய தமிழக அரசு முயற்சிக்கும்: தம்பிதுரை

நீட் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மறு ஆய்வு செய்ய தமிழக அரசு முயற்சி செய்யும் என லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

கரூர்: நீட் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மறு ஆய்வு செய்ய தமிழக அரசு முயற்சி செய்யும் என லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நடத்தப்பட்ட நீட் தேர்வு தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவை பலி கொண்டுவிட்டது. இதன் உச்சமாக அரியலூர் அனிதா தற்கொலை செய்து கொண்டது தமிழகத்தை உலுக்கியுள்ளது.

TN Govt to file review plea against NEET Verdict

தமிழக மக்கள் இந்த அதிர்ச்சியில் இன்னும் மீளவில்லை. இன்றும் தொடர்ந்து மாணவர்கள், அரசியல் கட்சியினர் அனிதாவுக்கு நீதி கோரி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கரூர் மருத்துவ கல்லூரியில் மருத்துவ வகுப்புகள் தொடங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, நீட் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மறு ஆய்வு செய்ய தமிழக அரசு முயற்சிக்கும் என்றார்.

English summary
AIADMK Senior leader and Loksabha Deputy Speaker Thambidurai said that the Tamil Nadu Govt will file a review plea against the Supreme Court's NEET Verdict.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X