For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

71வது சுதந்திர தினம்.. தியாகராஜனுக்கு அப்துல் கலாம் விருது.. ப்ரீத்திக்கு கல்பனா சாவ்லா விருது

71வது சுதந்திர தின நாளில் மஞ்சள் காமாலை தீர்க்கவல்ல மருந்தைக் கண்டுபிடித்த பேராசிரியர் தியாகராஜனுக்கு டாக்டர் அப்துல் கலாம் விருதும் கிரிக்கெட் வீராங்கனை ப்ரீத்திக்கு கல்பனா சாவ்லா விருதும் முதல்வர் வ

Google Oneindia Tamil News

சென்னை: 71வது சுதந்திர தின விழாவில் மஞ்சள் காமாலை தீர்க்கவல்ல மருந்தைக் கண்டுபிடித்த பேராசிரியர் தியாகராஜனுக்கு டாக்டர் அப்துல் கலாம் விருதும் கிரிக்கெட் வீராங்கனை ப்ரீத்திக்கு கல்பனா சாவ்லா விருதும் முதல்வர் வழங்கினார்.

இந்தியா முழுவதும் இன்று 71வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று சென்னை கோட்டையில் தமிழக முதல்வர் பழனிச்சாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

பின்னர் பல்வேறு துறையில் சிறப்பாக பணியாற்றி வருவோருக்கு விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்.

TN Govt gives Abdul Kalam award, Kalpana Chawla Award

அப்துல் கலாம் விருது

மஞ்சள் காமாலை தீர்க்கவல்ல வைரோவெப் மருந்தை மருத்துவ தாவரத்தில் இருந்து கண்டுபிடித்த டாக்டர் தியாகராஜனுக்கு அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டது. இவர் 345 ஆராய்ச்சி கட்டுரைகளையும், 20 நூல்களையும் வெளியிட்டவர் தியாகராஜன்.

கல்பனா சாவ்லா விருது

தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருது ப்ரீத்திக்கு வழங்கினார் முதல்வர். உடல் உறுப்பு பாதிக்கப்பட்டிருந்தாலும் மன உறுதியுடன் செயல்பட்டு வருவதால் ப்ரீத்திக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

TN Govt gives Abdul Kalam award, Kalpana Chawla Award

நல் ஆளுமை விருது

காவல் வீட்டு வசதி வாரியம், வேளாண் துறை இயக்குனருக்கு நல் ஆளுமை விருதை முதல்வர் பழனிச்சாமி வழங்கினார். வணிகவரித் துறைக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

இளைஞர் விருது

தமிழக அரசின் இளைஞர் விருது 3 பேருக்கு வழங்கப்பட்டது. கோவையைச் சேர்ந்த நோ ஃபுட் வேஸ்ட் அமைப்பின் நிறுவனர் பத்மநாபனுக்கு இளைஞர் விருது வழங்கப்பட்டது. உணவை சேகரித்து பசியோடு உள்ள மக்களுக்கு வழங்கி வருவதை ஊக்குவிக்கும் வகையில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

பெண்கள் முன்னேற்றம்

பெண்கள் முன்னேற்றத்திற்காகப் பாடுபடும் விருதுநகர் உமையலிங்கத்திற்கும் இளைஞர் விருது வழங்கப்பட்டது. பெண்கள் பிரிவில் மாநில இளைஞர் விருதை நெல்லையைச் சேர்ந்த ஸ்ரீபதி தங்கம் பெற்றார். விழிப்புணர்வு நிகழ்ச்சி, மருத்துவ முகாம், தூய்மைப் பணிகள் என பல்வேறு சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட ஸ்ரீபதிக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

பாராட்டு சான்றிதழ்

டாக்டர் கே. நாராயணசாமி, டாக்டர் சத்யகோபால் ஆகியோருக்குப் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. அதேபோன்று மாற்றுத் திறனாளிகள் நலன் அரசு விருதுகளும் வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் மருத்துவர் சங்கர், மதுரை க்யூர் அறக்கட்டளையின் இளையபாரிக்கு மாற்றுத் திறனாளிகள் நலன் விருது வழங்கப்பட்டது.

English summary
Tamilnadu Chief Minister Palanisamy presented APJ Abdul Kalam award to the Dr. Thiyarajan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X