For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராம் மோகன ராவை விசாரிங்க.. லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தமிழக அரசு திடீர் உத்தரவு

முன்னாள் தலைமைச் செயலாளர் ராம் மோகன ராவிடம் மீண்டும் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: தலைமைச் செயலாளர் ராம் மோகன ராவிடம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சட்ட விரோதமாக 131 கோடி ரூபாய் பணத்தை பதுக்கி வைத்திருந்ததாக கூறி தொழிலதிபர் சேகர் ரெட்டியை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிபிஐ கைது செய்தது. சட்டவிரோதமாக 34 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகளைப் பதுக்கிவைத்திருந்ததாக, தொழிலதிபர் சேகர் ரெட்டியின் கூட்டாளிகளான பிரேம்குமார், சீனிவாசலு, திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன் ஆகியோரை கடந்த டிசம்பர் மாதம் சிபிஐ கைதுசெய்தது.

சேகர் ரெட்டியிடம் நடத்தப்பட்ட விசாரணையின் பேரில் அவர் அளித்த தகவலின் அடிப்படையில் தலைமை செயலாளராக இருந்த ராம் மோகன ராவின் வீட்டில் கடந்த டிசம்பர் மாதம் சோதனை நடத்தப்பட்டது. அவரது மகன், அவரது சம்பந்தி ஆகியேரின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

ராவ் வீட்டில் ரெய்டு

ராவ் வீட்டில் ரெய்டு

அப்போது ராம் மோகன் ராவின் வீட்டில் இருந்து சொத்து மற்றும் தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் குறித்த ஆவணங்களை வருமானவரித் துறையினர் பறிமுதல் செய்தனர்.

வருமான வரித்துறை

வருமான வரித்துறை

தொடர்ந்து விசாரணை நடத்தியதில் சேகர் ரெட்டி மற்றும் ராம் மோகன ராவின் மகன் விவேக் ஆகியோர் நடத்தி வரும் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியது மற்றும் பல்வேறு முறைகேடுகள் குறித்த வருமானவரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

சேகர் ரெட்டி வீட்டில் கிடைத்த டைரி

சேகர் ரெட்டி வீட்டில் கிடைத்த டைரி

இந்நிலையில் சேகர் ரெட்டியின் வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரியில் அவரிடம் இருந்து ரூ.300 கோடி லஞ்சம் பெற்றதாக அமைச்சர்கள்,எம்எல்ஏ-க்கள், உயரதிகாரிகள் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த பட்டியலை வருமான வரித் துறை தலைமை செயலாளராக உள்ள கிரிஜா வைத்தியநாதனிடம் ஒப்படைத்தது.

திடீர் விசாரணை

திடீர் விசாரணை

அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டபோது உள்துறை செயலாளர் பதவி அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு நிரஞ்சன் மார்டியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது ராம் மோகன ராவிடம் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

English summary
TN government has ordered Vigilance to inquire Ex TN Chief Secretary Ram Mohan Rao.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X