For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அம்மா உணவகம், மருந்தகங்கள் தொடர்ந்து அமல்படுத்தப்படும்

By Mathi
Google Oneindia Tamil News

-அம்மா உணவகம், மருந்தகங்கள் தொடர்ந்து அமல்படுத்தப்படும்

-உணவு மானியத்துக்கு ரூ5,500 கோடி ஒதுக்கீடு

-7 மீன்பிடிதுறைமுக மேம்பாட்டுக்கு ரூ1,500 கோடி

-கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ7,000 கோடிக்கு பயிர்க்கடன்

-மீன்வளத்துறைக்கு ரூ768 கோடி ஒதுக்கீடு

-கல்லூரி, பல்கலை.யில் 200 ஆவின் பாலகங்கள் அமைக்கப்படும்

-ரூ40 கோடியில் மதுரையில் நறுமண பால் தயாரிப்பு ஆலஒ

-பள்ளி விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி ரூ755-ல் இருந்து ரூ900 ஆக உயர்வு

-கல்லூரி விடுதி மாணவர் உணவுப்படி ரூ875-ல் இருந்து ரூ1,000 ஆக உயர்வு

-ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூரில் புதிய மீன்பிடி துறைமுகம்

-மதுரையில் நறுமண பால் தயாரிப்புக்கான தொழிற்சாலை அமைக்கப்படும்

-மீனவர்களுக்கான மானிய டீசல் 15,000 லிட்டரில் இருந்து 18,000 லிட்டராக உயர்வு

-மீனவர்களுக்கு மானிய டீசல், மண்ணெண்ணெய் அளவு அதிகரிப்பு

-மீன்பிடி தடைக்கால உதவி தொகை ரூ5,000

-மீனவர்களுக்கு 5,000 வீடுகள் கட்டப்படும்

-நாட்டு மாடு இனப்பெருக்கத்துக்கு புதிய திட்டம்

-கோழிப்பண்ணை வளர்ச்சி திட்டத்துக்கு ரூ25 கோடி நிதி

-இலவச ஆடு மாடுகள் வழங்க ரூ182 கோடி நிதி ஒதுக்கீடு

-நாட்டு மாடுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்

-12,000 கறவை பசுக்கள் வழங்கப்படும்

-6 லட்சம் வெள்ளாடு/ செம்மறி ஆடுகள் வழங்கப்படும்

-கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு ரூ134.26 கோடி

-100 நாள் வேலைத்திட்டத்துக்கு ரூ1,000 கோடி ஒதுக்கீடு

-சமூக நலத்துறைக்கு ரூ4,781 கோடி நிதி ஒதுக்கீடு

-வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு விட கூடுதலாக 500 மையங்கள்

-பயிர்காப்பீடு மானிய திட்டத்துக்கு ரூ522 கோடி ஒதுக்கீடு

-பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு ரூ988 கோடி

-சொட்டுநீர் பாசனத்தின் கீழ் கரும்பு சாகுபடிக்கு பயிற்சி

-ஈழ அகதிகள் நலனுக்கு ரூ116 கோடி ஒதுக்கீடு

-இளைஞர் நலனுக்கு ரூ165 கோடி ஒதுக்கீடு

-100லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்திக்கு இலக்கு

-உழவர் பாதுகாப்பு திட்ட நிவாரணம் உயர்வு

-உழவர் பாதுகாப்பு திட்ட நிவாரணத் தொகை ரூ20,000 ஆக உயர்வு

-ஏழை குடும்பங்களுக்கு 3.5 லட்சம் இலவச வீட்டுமனை பட்டா

-இ சேவை மையங்களில் 500க்கும் மேற்பட்ட அரசு சேவைகள்

-10 புதிய வட்டாட்சியர் அலுவலகங்கள் குடியிருப்புகளுடன் அமைக்கப்படும்

-பள்ளி கல்விதுறைக்கு ரூ26,932 கோடி

-அம்மா திட்டத்தின் கீழ் மாதம் 50,000 மனுக்கள் மீது தீர்வு

-சிறைத்துறைக்கு ரூ282 கோடி நிதி ஒதுக்கீடு

-நீதி நிர்வாகத்துறைக்கு ரூ984 கோடி

-காவல்துறைக்கு ரூ1,483 கோடி ஒதுக்கீடு

-உள்ளாட்சித் தேர்தல் நடத்த ரூ174 கோடி ஒதுக்கீடு

-தீயணைப்பு துறைக்கு ரூ253 கோடி

-காவல்துறையை நவீனமயமாக்க ரூ47.91 கோடி

-நகர்ப்புற வறுமை ஒழிப்புக்கு ரூ272 கோடி

-காவல்துறை வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ450 கோடி

-சிறப்பு காவல் இளைஞர் படையில் 10,500 பேர் சேர்க்கப்படுவர்

-20,000 பசுமை வீடுகள் ரூ420 கோடியில் கட்டபடும்

-49 காவல்நிலையங்கள் கட்ட ரூ30 கோடி ஒதுக்கீடு

-வேலையில்லா இளைஞர்களுக்கான உதவித் தொகை தொடரும்

-தமிழர் கலாசார பாரம்பரிய அருங்காட்சியம் அமைக்கப்படும்

-தமிழ் வளர்ச்சிக்கு ரூ48 கோடி நிதி ஒதுக்கீடு

-வணிகவரி மூலம் ரூ77,234 கோடி வருவாய் கிடைக்கும்

-ஜிஎஸ்டி பேச்சுவார்த்தையில் மத்திய அரசுடன் உடன்பாடு

-மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது

-மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணிகள்

-ஜிஎஸ்டி வரி முறையில் பதிவு செய்ய அளவுகள் நிர்ணயம்

-ரூ41,965 கோடி கடன் வாங்க திட்டம்

-நிதிபற்றாக்குறை 2.79% ஆக இருக்கும்

-தமிழ அரசின் கடன் ரூ3.14 லட்சம் கோடி

-மொத்த வருவாய் ரூ1,59,362 கோடி

-நிதி பற்றாக்குறை ரூ41,977 கோடி

-பொருளாதார வளர்ச்சி 9% இருக்கும்

-அவினாசி- அத்திக்கடவு திட்டத்துக்கு ரூ250 கோடி ஒதுக்கீடு

-விவசாயிகளுக்கு ரூ7,000 கோடி பயிர்க்கடன்

-164 தேர்தல் வாக்குறுதிகள் அளித்தார் ஜெ.

-60 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது

-மீண்டும் பட்ஜெட்டை வாசிக்கிறார் ஜெயக்குமார்

-தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் நிற்கலாம்- செங்கோட்டையன்

-செங்கோட்டையன் தவறான தகவல் தருகிறார் - ஸ்டாலின்

-சசி, தினகரன் பெயரை நீக்க சபாநாயகர் மறுப்பு

-எதிர்க்கட்சிகள் அமளியால் பட்ஜெட் தாக்கல் நிறுத்தம்

-2-வது முறையாக பட்ஜெட் வாசிப்பை நிறுத்தினார் ஜெயக்குமார்

-அமளிக்கு இடையே மீண்டும் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் ஜெயக்குமார்

செங்கோட்டையன் விளக்கத்தை எதிர்க்கட்சிகள் ஏற்க மறுப்பு

-சசிகலா பெயரை சபை குறிப்பில் இருந்து நீக்க ஸ்டாலின் வலியுறுத்தல்

-நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒருவர் பெயரை எப்படி உச்சரிக்கலாம்?- ஸ்டாலின்

-ஸ்டாலின் குற்றச்சாட்டு சபை முன்னவர் செங்கோட்டையன் விளக்கம்

-சசிகலா பெயரை உச்சரிக்க ஸ்டாலின் எழுந்து ஆட்சேபம்

-பட்ஜெட் தாக்கல் செய்வதை நிறுத்தினார் ஜெயக்குமார்

-சசிகலா பெயரை சொல்ல திமுக, ஓபிஎஸ் அதிமுக கடும் எதிர்ப்பு

-திமுக எம்.எல்.ஏக்கள் அமளி நீடிக்கிறது

-திமுக எம்.எல்.ஏக்கள் அமளிக்கு இடையே பட்ஜெட் தாக்கல்

-பொதுச்செயலர் என்பதால் சசிகலா பெயரை குறிப்பிட்டேன்: ஜெயக்குமார்

-குற்றவாளி சசிகலா பெயரை குறிப்பிடுவதா?

-திமுக எம்.எல்.ஏக்கள் கடும் அமளி

-சசிகலா, தினகரன் பெயரை குறிப்பிட்டதற்கு திமுக கடும் எதிர்ப்பு

-எடப்பாடி பழனிச்சாமி அரசின் முதலாவது பட்ஜெட் தாக்கல்

-ஜெ. ஆட்சி திட்டங்களை சுட்டிக்காட்டி புகழாரம்

-நிதி அமைச்சர் ஜெயக்குமார் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்

-ஜெ.வுக்கு வழக்கம் போல புகழாரம்

-பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன் ஸ்டாலின் பேசமுயற்சி

-சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எடுக்க திமுக வலியுறுத்தல்

-சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்ய திமுக எதிர்ப்பு

-சட்டசபை கூட்டத் தொடர் தொடங்கியது

-சட்டசபைக்கு திமுக எம்.எல்.ஏக்கள் வருகை

-தலைமை செயலகத்தில் நிதி அமைச்சர் ஜெயக்குமார்

-சட்டசபையில் பலத்த பாதுகாப்பு

-சட்டசபை வளாகத்தில் போலீஸ் குவிப்பு

-தமிழகத்தை முன்னோடி மாநிலமாக உருவாக்கினார் ஜெ., - ஜெயக்குமார்

-ஜெயலலிதா மாபெரும் தலைவர் - ஜெயக்குமார்

-நிதிநிலை அறிக்கையை அம்மாவிடம் வைத்து ஆசி பெற்றேன் - ஜெயக்குமார்

-மெரீனாவில் நிதியமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

-ஜெயலலிதா நினைவிடத்தில் ஜெயக்குமார் அஞ்சலி

-நிதிநிலை அறிக்கையை வைத்து அஞ்சலி செலுத்தினார் ஜெயக்குமார்

-முதல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார் ஜெயக்குமார்

English summary
TamilNAdu government will present the budget on Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X