For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாஜி தலைமை செயலர் ஞானதேசிகன் சஸ்பெண்ட் உத்தரவு விரைவில் ரத்தாகிறது?

தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலர் ஞானதேசிகனை சஸ்பெண்ட் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு விரைவில் ரத்தாகிறது என்கின்றன கோட்டை வட்டாரங்கள். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் ஞானதேசி

By Raj
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலர் ஞானதேசிகனை சஸ்பெண்ட் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு விரைவில் ரத்தாகும் என தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சட்டசபை தேர்தலில் அதிமுக வென்று ஜெயலலிதா 2-வது முறையாக முதல்வராக பதவியேற்றார். அந்த விழாவுடன் கோட்டை பக்கமே ஞானதேசிகன் வரவில்லை.

 டிட்கோவுக்கு டிரான்ஸ்பர்

டிட்கோவுக்கு டிரான்ஸ்பர்

புதிய தலைமைச் செயலராக ராமமோகன் ராவ் நியமிக்கப்பட்டார். ஞானதேசிகன் டிட்கோ எம்டியாக தூக்கியடிக்கப்பட்டார்.

வைகுண்டராஜன் விவகாரம்

வைகுண்டராஜன் விவகாரம்

அதன்பின்னர் ஞானதேசிகனின் செயல்பாடுகள் குறித்து உள்விசாரணை நடத்தப்பட்டது. விவி மினரல்ஸ் வைகுண்டராஜனை காப்பாற்றும்விதமாக ஒரு கோப்பில் ஞானதேசிகன் கையெழுத்திடாமல் இருந்தது தெரியவந்தது.

சஸ்பெண்ட்

சஸ்பெண்ட்

இதையடுத்து ஞானதேசிகன் திடீரென சஸ்பென்ட் செய்யப்பட்டார். அதன் பின்னர் முதல்வராக இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது காட்சிகள் மாறின. ராமமோகன் ராவ் மூலமாக ஞானதேசிகன் சஸ்பென்ட் உத்தரவை ரத்து செய்ய வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ரத்தாகிறது?

ரத்தாகிறது?

ஆனால் ராமமோகன் பிடி கொடுக்காமல் இருந்திருக்கிறார். தற்போது புதிய தலைமைச் செயலர் வந்துள்ளார். ஞானதேசிகன் தரப்பு இப்போதும் சஸ்பென்ட் உத்தரவை ரத்து செய்வதில் மும்முரமாக இருந்து வருகிறதாம். விரைவில் க்ளைமாக்ஸ் தெரியும் என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.

English summary
Sources said that Tamilnaduu govt will revoke the suspension order of Former Chief Secretary Gnanadesikan very soon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X