For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தின் அமைதி, வளம், வளர்ச்சிக்காக 5 இயக்கங்களும் 11 சிறப்பு நோக்கு பெரும் திட்டங்களும்...

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: அமைதி, வளம், வளர்ச்சி என்ற குறிக்கோள்களை அடையவும், தொலைநோக்கு திட்டம் 2023 ஆவணத்தில் வகுக்கப்பட்ட இலக்குகளை அடையவும், மாநில அளவில் 5 இயக்கங்களையும், வளர்ச்சிக்கான 11 சிறப்பு நோக்கு பெரும் திட்டங்களையும் தமிழக அரசு வடிவமைத்துள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டசபையில் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது:

TN govt's Missions and Special Focus Areas of Development

மாநிலத்தில் அமைதி, வளம், வளர்ச்சி என்ற குறிக் கோள்களை அடையவும், தொலைநோக்கு திட்டம் 2023 ஆவணத்தில் வகுக்கப்பட்ட இலக்குகளை அடையவும், மாநில அளவில் 5 இயக்கங் களையும், வளர்ச்சிக் கான 11 சிறப்பு நோக்கு பெரும் திட்டங்களையும் இந்த அரசு வடிவமைத்துள்ளது.

இந்த 5 இயக்கங்களும் பல்வேறு துறைகள் மற்றும் நிர்வாக அமைப்புகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து உயர் லட்சிய இலக்குகளை அடையும் வகையில் வடிவமைக் கப்பட்டுள்ளன.

மாநில அளவிலான இந்த 5 இயக்கங்கள்:-

  • நீர் ஆதார மேலாண்மை மற்றும் குடி மராமத்து முறைக்கு புத்துயிரூட்டும் இயக்கம்.
  • குடிசைகளற்ற கிராமங்களையும், குடிசைப் பகுதிகளற்ற நகரங்களையும் உருவாக்கிட வீட்டு வசதிக்கான மாநில இயக்கம்.
  • வறுமை ஒழிப்பின் மூலம் ஏழைகளுக்குப் பொருளாதார உயர்வை வழங்குவதற்கான இயக்கம்.
  • தூய்மைத் தமிழகத்திற்கான இயக்கம்
  • திறன் மேம்பாட்டிற்கான இயக்கம்.
  • வளர்ச்சிக்கான 11 சிறப்பு நோக்கு பெரும் திட்டங்கள்:
  • வேளாண்மை மற்றும் அதைச் சார்ந்த முதன்மைத் துறைகளின் வளர்ச்சி.
  • நகர்ப்புற உட்கட்டமைப்பை வலுப்படுத்துதல்.
  • சுற்றுலாத்துறை மேம்பாடு.
  • குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை ஊக்குவித்தல்.
  • சாலைகள், மின்சாரம், சிறு துறைமுகங்கள், பாசனம், குடிநீர் போன்ற உட் கட் டமைப்பை மேம்படுத்த சிறப்புக் கவனம்.
  • தொழில் வழித்தடம் மூலமாக முதலீடுகளை ஊக்குவித்தல் மற்றும் தொழில் தொடங்க உகந்த சூழலை மேம்படுத்துதல்.
  • அனைவருக்கும் கல்வி, குறிப்பாக கல்வித் தரத்திற்கான சிறப்புக் கவனம்.
  • அனைவருக்கும் சுகாதாரம்.
  • சமூகப் பாதுகாப்பு, குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம் மீது சிறப்பு கவனம்.
  • நகர்ப்புறப் போக்குவரத்தினை வலுப்படுத்துதல்.
  • நல்லாட்சி மற்றும் நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்துதல்.
  • மேற்காணும் நோக்கங்களையும், இலக்குகளையும் எட்டுவதற்கான அனைத்து கொள்கைகளையும் திட்டங்களையும் வடிவமைத்து செயல்படுத்த உரிய அணுகு முறைகளை 2016-2017 ஆம் ஆண்டிற்கான இந்த திருத்த வரவு-செலவுத் திட்டம் எடுத்துரைத்துள்ளது.

இவ்வாறு பட்ஜெட்டில் கூறப் பட்டுள்ளது.

English summary
TN govt. said that to achieve peace, growth and prosperity in the State will following Five State Missions and Eleven Special Focus Areas of Development.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X