For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துபாயில் பரிதவிக்கும் 15 தமிழர்கள்... மீட்க நடவடிக்கை எடுக்க சீமான் வலியுறுத்தல்

Google Oneindia Tamil News

சென்னை: துபாயில் தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வேலைக்குச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 15 இளைஞர்கள் அங்கு கொத்தடிமை போல நடத்தப்படுகின்றனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசானது உடனடியாகத் தலையிட்டு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் வாயிலாக அந்த 15 தமிழர்களையும் மீட்பதற்கான நடவடிக்கையைத் துரிதப்படுத்த வேண்டும் என நாம் தமிழகர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

துபாய், அபுதாபியிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வேலைக்குச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 15 இளைஞர்கள் அங்குச் சிக்குண்டு தாங்கொணாத் துன்ப துயரங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

2 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் சென்ற அவர்களுக்கு அவர்கள் பணிபுரியும் நிறுவனமானது கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதலிலிருந்து ஊதியத்தை வழங்காது இழுத்தடித்து வந்திருக்கிறது.

கடந்த ஜனவரி மாதத்தோடு அவர்கள் 15 பேருக்கும் ஒப்பந்தக்காலமும், விசா தேதியும் முடிந்துவிட்டது. ஆனால், அவர்கள் பணிபுரியும் நிறுவனமோ நாட்டுக்கும் திருப்பி அனுப்பாது, ஊதியத்தையும் வழங்காது கொத்தடிமைகள் போல அவர்களை வைத்து வேலை வாங்கி வந்திருக்கிறது என சீமான் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை;

கொத்தடிமை

கொத்தடிமை

குடும்பப்பாரத்தைச் சுமக்கவும், வறுமையின் கோரப்பிடியிலிருந்து தங்களை மீட்கவும் ஆயிரம் கனவுகளோடு அந்நிய தேசங்களுக்குப் புறப்பட்டுச் சென்ற தமிழக இளைஞர்கள் அங்குக் கொத்தடிமை போல நடத்தப்படுகிற செய்திகள் அந்நியத் தேசங்களில் இருக்கும் தமிழர்கள் குறித்து அச்சத்தைத் தருகிறது.

துன்ப துயரங்கள்

துன்ப துயரங்கள்

துபாய், அபுதாபியிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வேலைக்குச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 15 இளைஞர்கள் அங்குச் சிக்குண்டு தாங்கொணாத் துன்ப துயரங்களுக்கு ஆளாகியுள்ள செய்தி மிகுந்த மன வேதனையையும், கவலையையும் அளிக்கிறது.

ஊதியம் வழங்கவில்லை

ஊதியம் வழங்கவில்லை

இரண்டாண்டு ஒப்பந்த அடிப்படையில் சென்ற அவர்களுக்கு அவர்கள் பணிபுரியும் நிறுவனமானது கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதலிலிருந்து ஊதியத்தை வழங்காது இழுத்தடித்து வந்திருக்கிறது. எத்தனையோ முறை கேட்டும் அதற்கு உரிய பதில் அளிக்காது காலத்தைக் கடத்தி வந்திருகிறது.

ஒப்பந்த காலம் முடிந்து விட்டது

ஒப்பந்த காலம் முடிந்து விட்டது

மேலும், கடந்த ஜனவரி மாதத்தோடு அவர்கள் 15 பேருக்கும் ஒப்பந்தக்காலமும், விசா தேதியும் முடிந்துவிட்டது. ஆனால், அவர்கள் பணிபுரியும் நிறுவனமோ நாட்டுக்கும் திருப்பி அனுப்பாது, ஊதியத்தையும் வழங்காது கொத்தடிமைகள் போல அவர்களை வைத்து வேலை வாங்கி வந்திருக்கிறது.

சிரமத்துடன் வாழ்க்கை

சிரமத்துடன் வாழ்க்கை

இதற்கு அந்நாட்டு நீதிமன்றங்கள் வாயிலாகத் தீர்வுகாண பலமுறை முயற்சித்தும் எந்தப்பயனும் கிட்டவில்லை. இதனால், அவர்களது அத்திவாசியத் தேவைகளுக்குக்கூடப் பணமில்லாது சிரமப்பட்டு நாட்களை நகர்த்தி வந்திருக்கிறார்கள். அவர்களையே நம்பியே வாழ்ந்து வந்த தமிழகத்திலுள்ள அவர்களது குடும்பங்களும் அன்றாட உணவுத் தேவைக்கும், அத்தியாவசியச் செலவுகளுக்கும் வழியில்லாது பல மாதங்களாக அல்லாடி வருகிறது.

நடவடிக்கையைத் துரிதப்படுத்துக

நடவடிக்கையைத் துரிதப்படுத்துக

எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசானது உடனடியாகத் தலையிட்டு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் வாயிலாக அந்த 15 தமிழர்களையும் மீட்பதற்கான நடவடிக்கையைத் துரிதப்படுத்த வேண்டும். மேலும், அவர்களுக்கு வர வேண்டிய ஊதியத் தொகையையும் பெற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதுமட்டுமல்லாது, வெளிநாட்டில் புலம்பெயர்ந்து பணிபுரியும் தமிழர்களுக்கு எனத் தனி அமைச்சகம் அமைத்து அவர்களது நலன்காத்திட வழிவகைச் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

English summary
Naam Thamizhar Katchi Chief coordinator Seeman urges TN Government take action to rescue 15 Tamilnadu people who are still in Dubai even their contract & visa period over.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X