For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2 மின் திட்டங்களை செயல்படுத்த ரூ.1500 கோடி பணம் வேணும்: பிரதமருக்கு ஜெ. கடிதம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

TN govt to take up power evacuation projects worth around Rs 6,000 cr
சென்னை: தமிழகத்தில் இரு மின்திட்டங்களை செயல்படுத்த ரூ.1500 கோடி ரூபாய் நிதி கேட்டு மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் இன்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் 2 திட்டங்களை நிறைவேற்ற தேசிய தூய்மை எரிசக்தி நிதியின் கீழ் ரூ.1500 கோடி தேவை என்று பிரதமரிடம் ஜெயலலிதா கேட்டுள்ளார்.

தமிழக அரசு 7,145 மெகா வாட் அளவிற்கு காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்வதற்கான காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை அமைத்துள்ளது.

அடுத்த 5 ஆண்டுகளில் 5,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறனை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அடுத்த மூன்றாண்டுகளில் சூரிய சக்தியின் மூலம் 3,000 மெகாவாட் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

காற்றாலை மின்நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை முழுவதுமாக பெற தேவையான டிரான்ஸ்பார்மர்களை நிறுவ வேண்டியுள்ளது.

இது தொடர்பாக இருமுறை கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஆனால் அமைச்சகங்களுக்கிடையேயான குழு நிதியை ஒதுக்க முடியாது என மறுத்துள்ளதாக ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார். தேசிய பசுமை நிதியின் கீழ் நிதி ஒதுக்க மறுத்திருப்பது வருத்தம் அளிப்பதாகவும் அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

English summary
The Tamil Nadu Chief Minister J Jayalalithaa has asked for Prime Minister's intervention to release Rs 1,500 crore from the National Clean Energy Fund (NCEF) to the State to support these projects.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X