For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பால் விலை உயர்வு... எதிர்கட்சிகளின் போராட்டம்... மக்களின் 'பல்ஸ்' பார்க்கும் அரசு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: எதிர்க்கட்சிகளின் கடுமையான கண்டனம் மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கு பிறகும், ஆவின் பால் விலையை அரசு குறைக்கவில்லை. கடந்த ஒரு வாரகாலமாக பால் விலை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து மின்கட்டணத்தையும் உயர்த்த அரசு முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் மனநிலையை அறியவும் அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றது. இதனையடுத்து 2012ஆம் ஆண்டு ஆவின் பால், லிட்டருக்கு 6.50 ரூபாய் விலை உயர்த்தப்பட்டது. மின்கட்டணம், பேருந்து கட்டணமும் உயர்த்தப்பட்டது.

இரண்டு ஆண்டுகளில்

இரண்டு ஆண்டுகளில்

இரண்டு ஆண்டுகளில் ஆவின் பால் லிட்டருக்கு 10 ரூபாய் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற போது ஒரு விட்டர் பால் 18 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது 80 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது.

மக்கள் பாதிப்பு

மக்கள் பாதிப்பு

ஒரு லிட்டர் பாலின் விலை,சில்லரை விலையில் 37 முதல், 45 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வினால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆவின் பால் விலை உயர்வை அடுத்து தனியார் பாலும் லிட்டருக்கு ரூ.4 உயர்ந்துள்ளது. இதனால் கடைகளில் டீ, காபி விலையும் உயர்ந்துள்ளது.

அரசு சமாதானம்

அரசு சமாதானம்

பாலுக்கான கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு உள்ளதாக அரசு கூறினாலும் இருப்பதாக, முதல்வர் பன்னீர்செல்வம் விளக்கம் எதிர்க்கட்சிகள், தமிழகம் முழுவதும் தினந்தோறும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஒன்றிணைந்த எதிர்கட்சிகள்

ஒன்றிணைந்த எதிர்கட்சிகள்

தேமுதிக, திமுக, மதிமுக, பாமக, விசிக என அனைத்துக் கட்சியினரும் ஆர்பாட்டம் நடத்திவிட்டனர். அரசுக்கு எதிராக கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளன எதிர்கட்சிகள். இந்த போராட்டங்கள் மக்கள் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தி இருப்பதாகவும், எதிர்க்கட்சிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.

அசராத அரசு

அசராத அரசு

லோக்சபா தேர்தல் தோல்வி மூலம், துவண்டிருந்த, எதிர்க்கட்சிகள் அனைத்தும், இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் எழுச்சி கண்டன. ஆனால், இத்தனைக்கு பின்னும், அரசு தரப்பில் அசரவில்லை. பால் விலை உயர்வை அரசு திரும்ப பெறவில்லை.

தனியாரும், பால் விலையை லிட்டருக்கு நான்கு முதல், ஆறு ரூபாய் வரை உயர்தியுள்ளதால், , அரசுக்கு எதிராக அதிருப்தி அதிகரிக்கும் என ஏற்பட்டுள்ளது. எனவே மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் அதிருப்தியை கருத்தில் கொண்டு, மக்களின் மனநிலையை அறிய அரசு, திட்டமிட்டு இருக்கிறது. இதற்காக, ரகசிய கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டு வருவதாக, சொல்கின்றனர்.

மின் கட்டண உயர்வு

மின் கட்டண உயர்வு

பால் விலை உயர்வையே சமாளிக்க முடியாமல் தடுமாறும் அரசு, மின் கட்டண உயர்வை எப்படி வெளியிடுவது என்பது குறித்து அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்களாம். எனினும் மின் கட்டண உயர்வினை இன்னும் ஒரு சில தினங்களில் அறிவிக்க அரசு முடிவு செய்து விட்டதாக கூறப்படுவதால் அடுத்த போராட்டத்திற்கு தயாராகி வருகின்றனர் எதிர்கட்சியினர்.

English summary
TN govt is said to be test the mindset of the people on Milk price hike and power tariff revision
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X