For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆசாரிபள்ளம் என்ஜினியரிங் கல்லூரியில் தமிழக-கேரள மாணவர்கள் மோதல்: 5 பேர் காயம்

By Siva
Google Oneindia Tamil News

குமரி: ஆசாரிபள்ளத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் தமிழக, கேரள மாணவர்களிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 5 பேர் காயம் அடைந்தனர்.

குமரி மாவட்டம் ஆசாரிபள்ளத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் தமிழகம், கேரளா உள்ளிட்ட பல மாநில மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழக மற்றும் கேரள மாணவர்கள் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 5 மாணவர்கள் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தால் கல்லூரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மாணவர்களின் மோதல் காரணமாக கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாகை அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்த தமிழக-கேரள மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 15 பேர் படுகாயம் அடைந்தனர் என்பத குறிப்பிடத்தக்கது.

English summary
Clash broke out between Tamil Nadu and Kerala students in an engineering college in Asaripallam, Kanyakumari district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X