• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சூப்பரான போட்டோவை டிபியா வையுங்கள்... நிர்மலாவின் உவ்வே வாட்ஸ் அப் லீக்!

By Gajalakshmi
|
  நிர்மலா தேவியின் அதிர்ச்சி வாட்சப் சாட்டும் வெளியானது- வீடியோ

  சென்னை: பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளுடன் பேசிய ஆடியோ வெளியாகி தமிழக உயர்கல்வித்துறையை புரட்டிப்போட்டுள்ளது. இந்த நிலையில் நிர்மலாதேவி மாணவிகளுடன் வாட்ஸ் அப் மூலம் தொடர்புகொண்டு அவர்களை விடாமல் விரட்டி அடிபணிய வைத்ததற்கான ஆதாரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

  அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை உயர்அதிகாரிகளுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள அழைத்த ஆடியோ வெளியாகி உயர்கல்வித்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மாணவிகளுடன் தொலைபேசியில் பேசியதோடு மட்டுமல்லாமல் அவர்களை வாட்ஸ் அப்பில் விடாமல் விரட்டி அடிபணிய வைக்க நினைத்தற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன.

  தனியார் தொலைக்காட்சியில் வெளியாகியுள்ள இந்த தரவுகளில் நிர்மலாதேவி மாணவிகளை 16 நாட்கள் தொடர்ந்து மூளைச் சலவை செய்தது தெரியவந்துள்ளது. மாணவிகள் முகத்தில் அடித்தாற் போல மறுப்பு தெரிவித்தாலும், நிர்மலாதேவி விடவில்லை. விடாது கருப்பு போன்று தொடர்ந்து அவர்களிடம் பேசிவந்துள்ளார்.

  குழுவாக செயல்பட அழைப்பு

  குழுவாக செயல்பட அழைப்பு

  நாமெல்லாம் சேர்ந்து ஒரு குழுவாக செயல்படலாம். இதில் உங்களுக்கு தேவையான மார்க், பணம் கிடைக்கும். அதேபோல், மிக ரகசியமாக, பாதுகாப்பான செயல்பாடுகளை செய்தால் மிகப்பெரிய ஆளாக வரலாம் என பேசியுள்ளார். மாணவிகளிடம் போனில் பேசிய போது ஆப்பர்டுனிட்டி என்று ஒளிவுமறைவாக பேசியவர் இந்த வாட்ஸ் அப் சேட்டில் அதிகாரிகளுக்கு மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஒத்துழைக்க வேண்டும் என்று வெளிப்படையாகவே மெசேஜ் செய்திருப்பது தான் அதிர்ச்சியின் உச்சம்.

  அழகான டிபி போட்டோ வையுங்கள்

  அழகான டிபி போட்டோ வையுங்கள்

  உங்களுடைய தனிப்பட்ட சூப்பரான அழகான போட்டோவை வாட்ஸ் அப் டிபியாக வையுங்கள், அதிர்ஷ்டம் எப்போவாவதுதான் கதவை தட்டும், அப்போது பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இதுபோன்ற வாய்ப்புகள் மாணவியாக இருந்தபோது எனக்கும் வந்தது, ஆனால், நான் நிராகரித்துவிட்டேன். ஆனால், நாம் அதை செய்யவில்லை என்றால் வேறு யாராவது அதை செய்வார்கள்.

  டீலுக்கு நிர்மலா சொன்ன கோட்வேர்டு

  டீலுக்கு நிர்மலா சொன்ன கோட்வேர்டு

  புத்திசாலித்தனமாக செயல்பட்டு, வெற்றிகாண்பதே அனைவருக்கும் நல்லது என்று மாணவிகளை தவறான வழியில் அழைத்துச்செல்ல முயற்சித்துள்ளார் என்பது உறுதியாகிறது. உங்களுக்கு டீல் ஓகே என்றால், தினமும் குட் மார்னிங், குட் ஈவினிங் மெசேஜ்களை கேப்பிட்டல் லெட்டரில் அனுப்பவும் என்று ரகசிய கோடுவேர்டு கொடுத்துள்ளார் நிர்மலாதேவி.

  எச்சரித்த கல்லூரி மாணவி

  எச்சரித்த கல்லூரி மாணவி

  பேராசிரியை தொல்லை தாங்கமுடியாமல் கோபப்பட்ட ஒரு மாணவி, நீங்கள் சொல்வதை கேட்கும்போதே உடம்பு கூசுகிறது. என்னிடம் பேசியதைப்போல், வேறு யாரிடமும் பேசிவிடாதீர்கள். உங்கள் வயதுக்கும், பதவிக்காக பார்க்கிறேன். எங்கள் குடும்பத்திற்கு இதுவெல்லாம் ஒத்துவராது, இதுவே வேறுயாராவது இப்படி சொல்லியிருந்தால் நடப்பதே வேறு என்று எச்சரிக்கிறார்.

  அசராத நிர்மலா தேவி

  அசராத நிர்மலா தேவி

  அப்போதும் அசிங்கப்பட்டதாக உணராத நிர்மலா தேவி உங்களுக்கு விருப்பம் இல்லையென்றால் விட்டுவிடுங்கள் கண்ணா வேறு மாணவிகளுக்கு இதனை பார்வேர்டு செய்யுங்கள் என்று வெட்கமே இல்லாமல் கேட்கிறார். பேப்பர் வேல்யூஷனுக்கு சென்ற போது தான் உயர் அதிகாரிகளை தன்னை தொடர்பு கொண்டு அவர்களின் இந்த விருப்பத்தை தெரிவித்ததாக கூறினார்.

  ரகசியம் காக்கப்படும் என உறுதி

  ரகசியம் காக்கப்படும் என உறுதி

  ஆனாலும் விடவில்லை நிர்மலா, என்னை பலமுறை பரிசோதித்தார்கள். பாதுகாப்பை உறுதி செய்துகொண்டார்கள். அதன்பிறகுதான் இதுபோன்ற வாய்ப்பு உள்ளது என்று என்னிடம் சொன்னார்கள். அதனால்தான் உங்களிடம் பேசிவருகிறேன். உங்களது நல்ல எதிர்காலத்திற்காகத்தான் நான் இதைச் செய்கிறேன் என மாணவிகளிடம் தொடர்ந்து பேசியுள்ளார் நிர்மலா தேவி.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  Tn lecturer Nirmaladevi lured college students as sex for degree with higher officials her whats app chat with 4 college students leaked now, in that she brainwashed the students continuously for 16 days.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more