For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சவுதியில் கை துண்டிக்கப்பட்ட பெண் சென்னை திரும்பினார்- இலவச சிகிச்சைக்கு மகன் கோரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: சவுதியில் வீட்டு உரிமையாளரால் கை துண்டிக்கப்பட்ட வீட்டு வேலைக்குச் சென்ற பெண் இன்று சென்னை வந்தடைந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு தேவையான மருத்துவ வசதிகளை தமிழக அரசு இலவசமாக செய்து கொடுக்க வேண்டும் என்று அவரது மகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காட்பாடியை அடுத்துள்ள விண்ணம்பள்ளி மூங்கிலேரி கிராமத் தைச் சேர்ந்தவர் கஸ்தூரி. குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த ஜூலை மாதம் சவுதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்காக சென்றார். அங்கு அவருக்கு அதிகப்படியான வேலை கொடுத்து சரியாக உணவு வழங்காமல் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

 TN maid lady returns from saudi to chennai today

இதுகுறித்து வீட்டின் உரிமையாளரிடம் கேட்டுள்ளார். இது தொடர்பான பிரச்சினையில் கஸ்தூரியின் வலது கையை துண்டித்த வீட்டின் உரிமையாளர் அவரை 3 ஆவது மாடியில் இருந்து இருந்து கீழே தள்ளியுள்ளார்.

உயிருக்கு ஆபத்தான நிலை யில் இருந்த அவரை அருகில் உள்ள வீட்டில் வசித்த இந்தியர் ஒருவர் மீட்டு தனியார் மருத்துவ மனையில் அனுமதித்தார். இந்த தகவலை அடுத்து கஸ்தூரியை மீட்டுக் கொடுக்கும்படி அவரது உறவினர்கள் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் கடந்த மாதம் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் மனு அளித்தனர். இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் விசா ரணை நடத்தினர். மேலும், அவரை இந்தியாவுக்கு அனுப்பவும் நட வடிக்கை எடுத்தனர்.

இந்நிலையில் சவுதியில் இருந்து அவர் இன்று விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு தமிழக அதிகாரிகள் வரவேற்பளித்தனர். முன்னதாக அவருக்கு சென்னையில் சிகிச்சை அளிக்க உறவினர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். இதுகுறித்து கஸ்தூரியின் மகன் மோகன் கூறும்போது, "அம்மாவிற்கு காலில் எலும்பு முறிவுக்கு போடப்பட்ட கட்டு பிரிக்கப்படவில்லை.

மாடியில் இருந்து கீழே விழுந்ததால் முதுகுப் பகுதியில் வலி அதிகமாக இருப்பதாக கூறினார். அவருக்கு சென்னையில் சிகிச்சை அளிக்க முடிவு செய்திருக்கிறோம். எங்களுக்கு போதிய வருமானம் இல்லை. எனவே, மருத்துவ செலவுகளை இலவசமாக அளிக்க முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும்''என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

English summary
TN lady who went to saudi for maid work and injured in hand return to chennai. her son asked TN govt for free treatment to her.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X