For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐரோப்பிய ஒன்றிய தீர்ப்பு எதிரொலி: புலிகள் மீதான தடையை நீக்குக- இந்தியாவில் வலுக்கும் முழக்கம்!

இந்தியாவிலும் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: ஐரோப்பிய ஒன்றிய மேல்நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்க வேண்டும் என்ற குரல் இந்தியாவில் மீண்டும் வலுவாக எதிரொலிக்க தொடங்கும் நிலை உருவாகி உள்ளது..

இலங்கையின் நெருக்கடியால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்தது ஐரோப்பிய ஒன்றியம். இன்று அதன் மேல்நீதிமன்றமே விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலில் இருந்து நீக்கி தீர்ப்பளித்தது.

TN Parties demand to lift ban on LTTE

இந்தியாவிலும் 1991-க்குப் பின்னர் ஜெயலலிதாவின் நெருக்கடியால் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டது. இத்தடை தொடர்ந்தும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

2009-ம் ஆண்டு ஆயுதங்களை புலிகள் மவுனிப்பதாக அறிவித்தனர். அதன்பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆயுத செயற்பாடுகள் நடைபெறவில்லை.

இப்போது 25-க்கும் மேற்பட்ட நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்நீதிமன்றமே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமானது 2009-க்குப் பின்னர் பயங்கரவாத செயல்களில் ஈடுபடவில்லை; ஆகையால் பயங்கரவாத பட்டியலில் இருந்து நீக்க உத்தரவிட்டுள்ளது.

இத்தீர்ப்பை பின்பற்றி இந்தியாவிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்க வேண்டும் என்ற முழக்கங்களை அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் அதிகம் கேட்க முடிகிறது.

English summary
Tamilnadu Political Parties demanded that the Centre should lift the ban on LTTE.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X