For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவால் தமிழகத்துக்கு பாதகம்- சட்டசபையில் முதல்வர் தனி தீர்மானம்

மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவுக்கு இன்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அணை பாதுகாப்பு மசோதாவுக்கு கடந்த ஜூன் 13-ஆம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த மசோதா ஜூலை மாதம் நடைபெறும் குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படவுள்ளது.

TN passes resolution for opposing Dam Safety Bill

தற்போதைய நிலையில் இந்த சட்டத்தை கொண்டு வந்தால் மாநில அரசால் பராமரித்து இயக்கப்படும் அணைகளை, குறிப்பாக அண்டை மாநிலங்களில் இடம்பெற்றுள்ள தமிழக அரசுக்குச் சொந்தமான அணைகளைப் பராமரித்து இயக்குவதில் பிரச்சினைகள் உருவாகும்.

எனவே அணைகள் பாதுகாப்பு சட்டத்தைக் கொண்டு வருவதற்கு முன்பு அனைத்து மாநிலங்களின் ஒருமித்த கருத்தை கட்டாயம் பெற வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு.

தமிழக அரசின் இந்த தீர்மானத்தை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வரவேற்றன.

அணைகளின் பாதுகாப்பை மத்திய அரசு பறிக்க முயற்சிப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் அணை பாதுகாப்பு சட்டம் தேவையில்லாத ஒன்று எனவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இந்நிலையில் மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது அவர் கூறுகையில் அணைகள் பாதுகாப்பு மசோதாவில் தமிழகத்தின் உரிமைகள் பாதிக்கக் கூடிய அம்சங்கள் உள்ளன.

தமிழக அரசால் அண்டை மாநிலங்களில் கட்டப்பட்டுள்ள அணைகளை இயக்குதல், பராமரித்தல் பிரச்சினை வரும். மாநிலங்களை கலந்தாலோசித்து ஒருமித்த கருத்து ஏற்பட்டவுடன் மசோதா கொண்டு வர வேண்டும். எனவே அந்த மசோதாவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கூறி தீர்மானம் நிறைவேற்றினார்.

English summary
Tamilnadu passes resolution for opposing Dam Safety Bill which was passed by Centre in the month of June.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X