For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வி.எச்.பி. ரத யாத்திரையை தடுக்க முயற்சி- திருமாவளவன், கொளத்தூர் மணி, ஜவாஹிருல்லா கைது

தமிழகத்துக்குள் விஎச்பி ரத யாத்திரை நுழைவதைத் தடுப்போம் என அறிவித்த தலைவர்கள் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    வி.எச்.பி. ரத யாத்திரை எதிர்ப்பு - திருமாவளவன் கைது- வீடியோ

    சென்னை: விஸ்வ ஹிந்து பரிஷத்தின் ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க சென்ற போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கைது போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே ரத யாத்திரை நுழைவதைத் தடுப்போம் என அறிவித்த கொளத்தூர் மணி, ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

    வி.எச்.பியின் ரத யாத்திரையை தமிழகத்துக்குள் அனுமதிக்கக் கூடாது என பல்வேறு கட்சித் தலைவர்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால் இந்த யாத்திரைக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. கேரளாவில் இருந்து தமிழகத்துக்குள் நுழையும் இந்த யாத்திரையை தடுத்து நிறுத்துவோம் எனவும் அந்த தலைவர்கள் அறிவித்தனர்.

    TN Police arrest leaders on VHP Yatra row

    இதற்காக தமிழக எல்லைக்கு புறப்பட்டுச் சென்றனர். இதையடுத்து நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் நெல்லைக்கு சென்ற தலைவர்களை நடுவழியிலேயே தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்துள்ளனர்.

    திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், தந்தை பெரியார் தி.க. தலைவர் கோவை ராமகிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    TN Police arrest leaders on VHP Yatra row

    ரத யாத்திரைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க சென்ற போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
    மேலும் ரத யாத்திரைக்கு எதிரான போராட்டத்திற்காக செங்கோட்டை சென்று கொண்டிருந்த எஸ்.டி.பி.கட்சி மாநில தலைவர் தெஹலான் பாகவியை தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் காவல்துறையினர் கைது செய்தனர்.

    English summary
    Tamilnadu Police preventive arrested the political leaders who were opposing to the VHP Yatra.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X