For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜஸ்தான் கொள்ளையன் நாதுராமை பிடிக்காமலேயே சென்னை திரும்பிய தமிழக போலீசார்

ராஜஸ்தான் கொள்ளையர்களை பிடிக்க சென்ற தமிழக போலீசார் அனைவரும் விமானம் மூலம் சென்னை திரும்பினர்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Recommended Video

    நாதுராமை பிடிக்காமலேயே சென்னை திரும்பிய தமிழக போலீசார்- வீடியோ

    சென்னை: கொள்ளையர்களால் சுடப்பட்டு காயமடைந்த கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் உள்ளிட்ட தமிழக காவல்துறையினர் ராஜஸ்தானில் இருந்து சென்னை திரும்பியுள்ளனர்.

    ராஜஸ்தானில் பதுங்கியுள்ள கொள்ளையர்களை பிடிக்க அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க அவர்கள் சென்னை திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    சென்னை கொளத்தூர் ரெட்டேரி லட்சுமிபுரம் கடப்பா சாலையில் மகாலட்சுமி நகைக்கடையில் கடந்த 16ஆம் தேதி பட்டப்பகலில் கடையின் மேற்கூரையில் ஓட்டை போட்டு மூன்றரை கிலோ தங்கம், நான்கரை கிலோ வெள்ளி, ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

    ராஜஸ்தான் கொள்ளையர்களைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அதில் ஒரு தனிப்படையினர் ராஜஸ்தானுக்குச் சென்று நாதுராம், தினேஷ் சவுத்ரி ஆகியோரின் உறவினர்கள் 4 பேரை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.

    இன்ஸ்பெக்டர் வீரமரணம்

    இன்ஸ்பெக்டர் வீரமரணம்

    கடந்த 8ஆம் தேதியன்று மீண்டும் சென்ற தனிப்படை போலீசார், நாதுராம், தினேஷ் சவுத்ரியை பிடிக்க முயன்றபோது நடந்த சண்டையில் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிந்தார். இன்ஸ்பெக்டர் முனிசேகர் மீது குண்டுகள் பாய்ந்ததில் காயமடைந்தார். உடனிருந்த காவலர்கள் இன்பரோஸ், குருமூர்த்தி, சுதர்சன் ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டது.

    கைது நடவடிக்கை

    கைது நடவடிக்கை

    இதனையடுத்து சென்னை மேற்கு மண்டல இணை ஆணையர் சந்தோஷ் குமார் தலைமையில் சென்ற தனிப்படை காவலர்கள் சம்பவம் நடந்த இடத்தில் ஆய்வு நடத்தினர். கொள்ளையன் தினேஷ் சவுத்ரியை கைது செய்தனர். நாதுராம்க்கு அடைக்கலம் கொடுத்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

    தமிழகம் திரும்பிய காவலர்கள்

    தமிழகம் திரும்பிய காவலர்கள்

    இந்த நிலையில் மேற்கு மண்டல இணை ஆணையர் சந்தோஷ் குமார் தலைமையிலான போலீசார் விமானம் மூலம் சென்னைக்கு திரும்பியுள்ளனர். கொள்ளையர்களால் தாக்கப்பட்ட கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகரும்,காயமடைந்த காவலர்களும் சென்னை திரும்பினார்.

    நாதுராமை கைது செய்ய நடவடிக்கை

    நாதுராமை கைது செய்ய நடவடிக்கை

    ராஜஸ்தானில் பதுங்கியுள்ள கொள்ளையர்களை பிடிக்க மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க சென்னை திரும்பினர். புதிய தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்களை பிடிக்க தமிழக போலீசார் மீண்டும் விரைவில் ராஜஸ்தான் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    English summary
    TamilNadu police back to Chennai From Rajasthan.The Madhuravoyal Law and Order Inspector S. Periyapandi was shot dead in Rajasthan when he was trying to catch the suspects in the Kolathur burglary.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X