For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லியை விட தமிழ்நாட்டில் தான் மின் கட்டணம் குறைவு: சட்டசபையில் நத்தம் விஸ்வநாதன்

Google Oneindia Tamil News

TN power tariff is comparatively very low : Naththam Vishwanathan
சென்னை: இந்தியாவின் பிற மாநிலக்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் மின் கட்டணம் குறைவாகவே வசூலிக்கப் படுவதாகத் தெரிவித்துள்ளார் தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்.

நடைபெற்று வரும் தமிழக சட்டசபைக் கூட்டத்தொடரில் இன்றைய கேள்வி நேரத்தின் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ. செளந்தர்ராஜன், ‘டெல்லியை போல் தமிழகத்திலும் மின் கட்டணம் குறைக்கப்படுமா? எனக் கேள்வி எழுப்பினார்.

அக்கேள்விக்கு தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அளித்த பதிலில், ‘டெல்லியில் குறைக்கப்பட்டுள்ள மின் கட்டணத்தை விட தமிழகத்தில் மின் கட்டணம் குறைவு தான். மேலும், தமிழகத்தில் 13.69 லட்சம் குடிசைகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் மற்ற மாநிலங்களைவிட மின் கட்டணம் குறைவு தான்' எனத் தெரிவித்தார்.

English summary
Comparing other states in India, power tarriff in TN is very low. says electricity minister Naththam Viswanathan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X