For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக அரசின் கடன் ரூ.3.55 லட்சம் கோடி- ஓபிஎஸ்

தமிழக அரசின் கடன் ரூ. 3.55 லட்சம் கோடியாக இருக்கும் என்று துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: வரும் 2018-2019-ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் தமிழக அரசின் கடன் ரூ. 3,55,845 கோடியாக இருக்கும் என்று துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்தார்.

2018-19-ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை 8-ஆவது முறையாக தாக்கல் செய்தார் ஓபிஎஸ். அவர் தனது பட்ஜெட் உரையை நிகழ்த்தி வருகிறார்.

TNs governments debt will be Rs. 3,55,845 crore

அதில் இந்த ஆண்டுக்கான கடனாக ரூ.3,55, 845 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2017-18-ஆம் ஆண்டில் ரூ.3,14,366 கோடியாக இருந்தது.

ரூ1,43,962 கோடி கடன் பெற தமிழக அரசுதிட்டமிட்டுள்ளது. 2018-19ல் அரசின் வருவாய் ரூ1.76 லட்சம் கோடியாக இருக்கும் என பட்ஜெட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர் ஊதிய உயர்வால் ரூ14,719 கோடி செலவு ஏற்பட்டுள்ளது. வேலையில்லா இளைஞர்களுக்கு திறன்மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்படும். 177 மீனவர்களுக்கு தலா ரூ20 லட்சம் வழங்கப்பட்டுள்ளது என்றும் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

English summary
TN Government produces Budget for the current finance year. It says that, debt will be Rs. 3,55,845 crore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X