தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் பதிலில் திருப்தியில்லை.. மீண்டும் நோட்டீஸ் அனுப்பினார் சபாநாயகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். செப்டம்பர் 5ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க தனபால் வலியுறுத்தல்

முதல்வர் பழனிசாமி மீது நம்பிக்கையில்லை என தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் தனித்தனியாக ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் மனு அளித்தனர். பின்னர் அவர்கள் புதுச்சேரி ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 TN Speaker Danapal once again has sent notice to Dinakaran faction MLAs

இப்படி தங்கியுள்ளவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலுக்கு பரிந்துரை செய்தார். இதனையடுத்து அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.

இதையடுத்து தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் சிலர் நேற்று முன்தினம் சட்டசபை செயலாளரை சந்தித்து விளக்கமளித்திருந்தனர்.
ஆனால், சபாநாயகர் தனபால் மீண்டும் 19 எம்எல்ஏக்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில், செப்டம்பர் 5ம் தேதிக்குள் இவர்கள், முழுமையான விளக்கத்தை அளிக்க வேண்டும். கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி அளித்த விளக்கத்தை இடைக்கால பதிலாகவே கருதப்படும் என்று, தனபால் கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TN Speaker Danapal once again has sent notice to Dinakaran faction MLAs and seeking their reply.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற