For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மருத்துவ நுழைவ தேர்வு ரத்து - தமிழக மாணவர்கள் ஏமாற்றம்

Google Oneindia Tamil News

நெல்லை: அகில இந்திய மருத்துவ நுழைவு தேர்வு ரத்து செய்யப்பட்டதால் தமிழக மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இந்தியா முழுவதும் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் உளள இடங்கள் மாநில ஓதுக்கீட்டுக்கு 85 சதவீத இடங்கள் போக மீதமுள்ள 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஓதுக்கீட்டுக்கு வழங்கப்படும்.

TN students discontent due to Medical entrance cancellation

மாநில அரசு ஓதுக்கீட்டு இடங்கள் மாநில அரசால் ஒற்றை சாரள முறைப்படி நிறைவேற்றப்படும். அதே போல மத்திய அரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 15 சதவீத இடங்கள் அகில இந்திய நுழைவு தேர்வு மூலம் நிரப்பப்டும்.

மருத்துவ மாணவர்களுக்கான இந்த அகில இந்திய தேர்வு கடந்த மாதம் 3ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் 6 லட்சத்து 30 ஆயிரம் பேர் எழுதினர்.

இந்த நிலையில் கேள்விதாள்கள் லீக் ஆகியதாக குறறச்சாட்டு எழுந்ததாலும், இதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் தெரிய வந்ததால் நடந்த மருத்துவ நுழைவு தேர்வை ரத்து செய்து விட்டு மறு தேர்வு நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நடைபெற்ற தேர்வை ரத்து செய்து விட்டு மீண்டும் 4 வாரத்திற்குள் மறு தேர்வு நடத்த உத்தரவு பிறப்பித்தனர்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் நாடு முழுவதும் தேர்வு எழுதிய மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக தமிழகம் முழுவதும் சுமார் 20 ஆயிரம் பேர் இந்த தேர்வை எழுதியிருந்தனர்.

பல்வேறு வகுப்புகள், சிறப்பு வகுப்புகள் சென்று கடும் பயிற்சிக்கு பிறகு தேர்வை எதி்ர்கொண்டதால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. இதனால் அவர்கள் பலத்த ஏமாற்றத்துக்கு ஆளாகி உள்ளனர்.

English summary
TN students discontent in MBBS entrance examination cancelled by the Supreme Court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X