For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கான தினசரி படிக்காசு குறைப்பு

அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கான தினசரி படிக்காசு குறைக்கப்பட்டுள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: பேருந்து கட்டணத்தை உயர்த்தியதை அடுத்து அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கான தினசரி படிக்காசை தமிழக போக்குவரத்துக் கழகம் குறைத்துள்ளது.

டீசல் விலை உயர்வு, ஊதிய உயர்வு, பராமரிப்பு கட்டண உயர்வு உள்ளிட்டவையால் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு தெரிவித்தது. இதையடுத்து நேற்று முதல் அமலுக்கும் வந்தது.

TN Transport Corporation decreases the amount which was given to driver and conductor

இந்நிலையில் டிரைவர் மற்றும் கன்டக்டர்களுக்கு வழங்கப்படும் படிக்காசை தமிழக போக்குவரத்து கழகம் குறைத்துள்ளது. பொதுவாக டிரைவர் மற்றும் கன்டக்டர்களுக்கு அவர்கள் வசூலிக்கும் தொகையில் ரூ.1000-க்கு 1.85 சதவீதம் என்ற அடிப்படையில் தினமும் படிக்காசு ரூ.16 வழங்கப்படும்.

இது ஊதியமில்லாமல் கிடைக்கும் எக்ஸ்ட்ர தொகையாகும். இந்நிலையில் தற்போது பேருந்து கட்டணத்தை மாநில அரசு உயர்த்தியதை போல் ஊழியர்களுக்கு வழங்கப்படும் பேருந்து காசையும் போக்குவரத்து கழகம் குறைத்துள்ளது.

இனி படிக்காசு தினந்தோறும் ரூ. 1000-க்கு ரூ. 10.80 பைசா மட்டுமே வழங்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

English summary
TN Transport Corporation decreases the amount which was given to driver and conductor daily for each collection Rs. 1000.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X