For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

3 நாட்கள்.. 20,567 பஸ்கள்.. 26 புக்கிங் மையங்கள்.. இது தமிழக அரசின் தீபாவளி ஸ்பெஷல்!

இம்முறை அதிக அளவில் தீபாவளிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    தீபாவளி சிறப்பு பஸ்கள் அதிக அளவில் இயக்கப்படும்- அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு- வீடியோ

    சென்னை: இம்முறை அதிக அளவில் தீபாவளிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    தீபாவளிக்கு இப்போதே மக்கள் தயாராகி வருகிறார்கள். நவம்பர் 6ம் தேதி தீபாவளி என்பதால் 4 மற்றும் 5 தேதிகளில் வீட்டிற்கு செல்ல இப்போதே பேருந்து பதிவு செய்ய தொடங்கியுள்ளனர்.

    TN transport minister announces Special Bus schedule for Deepavali

    இந்த நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் சிறப்பு பேருந்துகள் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    அதில், தீபாவளிக்கு 20,567 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. 13,764 சென்னையில் இருந்து இயக்கப்படும். நவம்பர் 3, 4, 5 தேதிகளில் இந்த பேருந்து இயக்கப்படும்.

    TN transport minister announces Special Bus schedule for Deepavali

    மற்ற மாவட்டங்களில் இருந்து 3500 பேருந்துகள் இயக்கப்படும். தீபாவளி முடிந்து சென்னைக்கு திரும்பி வர கூடுதலாக 11182 பேருந்துகள் இயக்கப்படும்.

    சிறப்பு முன்பதிவு மையங்கள் 26 உருவாக்கப்பட உள்ளது. நவம்பர் 1ம் தேதி சிறப்பு முன்பதிவு மையங்கள் தொடங்கும்.

    சென்னையில் புறநகர் பகுதியில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும். கேகே நகரில் சிறப்பு பேருந்து நிலையம் தற்காலிகமாக அமைக்கப்படும். தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

    TN transport minister announces Special Bus schedule for Deepavali

    English summary
    TN transport minister M R Vijayabhaskar announces Special Bus schedule for Deepavali.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X