For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குடகில் செம மழை காத்திருக்கு.. காவிரி டெல்டாவுக்கு நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்

புயல் காரணமாக தமிழகத்தில் கனமழை உள்ளதாக வெதர்மேன் தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    காவிரி டெல்டாவுக்கு நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்

    சென்னை: அரபிக் கடலில் உருவாகியுள்ள புதிய புயலால் தமிழகத்திற்கும் நல்லது நடக்கப் போகிறது. இதை நாம் சொல்லவில்லை , நம்ம தமிழ்நாடு வெதர்மேன்தான் கூறியுள்ளார்.

    தென் மேற்குப் பருவ மழை தொடங்கியுள்ளது. கேரளாவில் அது வலுப் பெற்றுள்ளது. தமிழகத்திலும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழைப் பொழிவு காணப்படுகிறது.

    கன்னியாகுமரியில் தொடர்ந்து நேற்று முதல் விட்டு விட்டு கன மழை பெய்து வருகிறது. இதனால் கடலோரப் பகுதிகளில் குறிப்பாக குமரி முதல் நீரோடி வரை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடலும் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.

    குடையுடன் வந்த மேகம்.. இதமான காற்றோடு பெய்த சாரல்.. குளுகுளுவென மாறியது கோவைகுடையுடன் வந்த மேகம்.. இதமான காற்றோடு பெய்த சாரல்.. குளுகுளுவென மாறியது கோவை

    வலுப்பெறும்

    வலுப்பெறும்

    தற்போது அரபிக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது புயலாக வலுப் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் வறண்டு போய்க் கிடந்த பல பகுதிகளில் நீர்வரத்து கிடைக்கவுள்ளது.

    நல்ல செய்தி

    நல்ல செய்தி

    இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ள ஒரு டிவிட்டர் தகவலில் இன்னொரு நல்ல செய்தி சொல்லப்பட்டுள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது: "அரபிக் கடலில் உருவாகியுள்ள புயலால் கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு நல்ல மழை காத்துள்ளது.

    மழைப்பொழிவு

    மழைப்பொழிவு

    அதேபோல கர்நாடகா, கேரளா, தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் நல்ல மழைப் பொழிவுக்கு வாய்ப்புள்ளது. இங்கு மிகப் பெரிய அளவில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

    வயநாடு

    வயநாடு

    கர்நாடகத்தின் குடகு மற்றும் கேரளாவில் உள்ள வயநாடு ஆகிய பகுதிகளில் காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நல்ல மழை பெய்யவுள்ளது. இந்த சீசனில்இதுதான் முதல் நல்ல மழையாக இருக்கும்" என்று கூறியுள்ளார் வெதர்மேன்.

    டெல்டா மக்கள்

    குடகு பகுதியில் நல்ல மழை பெய்தால் அது காவிரிப் பாசனத்தை நம்பி இருக்கும் இரு மாநில விவசாயிகளுக்கும் நல்ல செய்தியாகும். மிகப் பெரிய மழை பெய்து கர்நாடக அணைகள் நிரம்பி தமிழகத்திற்கு வரும் நாளுக்காக காவிரி டெல்டா மக்கள் காத்துள்ளனர்.

    English summary
    TN Weatherman says that, Tamil Nadu will get good rains due to Cyclone in Arabian sea
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X