For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எம்.பி.க்கள் சஸ்பென்ட் விவகாரம்.. ஆக. 7-ல் தமிழகம் வரும் மோடிக்கு எதிராக காங். கருப்பு கொடி

Google Oneindia Tamil News

சென்னை : நாடாளுமன்றத்தில் 25 காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து, வரும் 7 ஆம் தேதி சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்பு கொடி காட்டப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி.,க்கள் 25 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து சென்னை திருவல்லிகேணியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

evkselangovan

அப்போது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது..

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி.,க்கள் 25 பேரை சஸ்பெண்ட் செய்துள்ளனர். இதை கண்டித்து ஜனநாயக முறையில் போராடுகிறோம்.

மோடி அவர்கள் விரைவில் 25 பேரின் இடைநீக்கத்தை நீக்கி மீண்டும் நாடாளுமன்றத்தில் பங்கேற்க அனுமதிக்கவில்லை என்றால் வரும் 7-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வரும் போது காங்கிரசார் கருப்பு கொடி காட்டுவோம்.

இவ்வறு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறினார்.

நாடாளுமன்றத்தில் 25 காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து, வரும் 7 ஆம் தேதி சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்பு கொடி காட்டப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவித்துள்ளார்.

English summary
TNCC President EVKS.Elangovan announced that black flag protest aginst modi when he comes to tamilnadu on Aug 7.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X