For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மின்வெட்டு பற்றி இனி எஸ்எம்எஸ் தகவல் வரும்!'

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஹலோ ஈ.பி ஆபிசுங்களா கரண்ட் எப்ப சார் வரும்? என்று இனி போன் போட்டு கேட் வேண்டாம். ஏனெனில் மின்தடை ஏற்படும் நேரம் குறித்து இனிமேல் எஸ்எம்எஸ் அனுப்ப தமிழக மின் விநியோகத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

தமிழகம் மின்சாரவாரியம் சார்பில் மின்கட்டணம் குறித்து எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டு வருகிறது. இதன் அடுத்த கட்டமாக அறிவிக்கப்பட்ட மின்தடை, திடீர் என்று ஏற்படும் மின்தடை குறித்து எஸ்எம்எஸ் அனுப்பப்பட உள்ளது.

இதுகுறித்து மின் விநியோகத்துறை அதிகாரிகள் கூறுகையில், ''மத்திய அரசின் மறுசீரமைக்கப்பட்ட மின் மேம்பாடு சீரமைப்பு திட்டத்தின் கீழ்

தமிழ்நாட்டில் உள்ள 110 நகரங்களில் மின் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.

சாப்ட்வேர் தயாராகுது

சாப்ட்வேர் தயாராகுது

இதற்கான தகவல்களை கொடுக்கும் சாப்ட்வேர் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. பகுதி வாரியாக மின் விநியோகம் செய்யும் அமைப்புகளின் தகவல்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது.

எஸ்.எம்.எஸ் தகவல்

எஸ்.எம்.எஸ் தகவல்

அந்தப் பணிகள் முடிந்த பிறகு, கணினி வழியாக மின்தடைக்கான எஸ்எம்எஸ் அறிவிப்பு வாடிக்கையாளர்களுக்கு வரும்.

மின் கட்டணம்

மின் கட்டணம்

ஏற்கனவே 1 கோடியே 8 லட்சம் பேர் எஸ்எம்எஸ் மூலம் மின்கட்டண சேவையை பெற்று வருகின்றனர். இந்த சேவையை அறிமுகப்படுத்திய பிறகு கடைசி தேதிக்கு பின் கட்டணம் செலுத்துபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது'' என்றனர்.

மின் தடை எம்.எம்.எஸ்

மின் தடை எம்.எம்.எஸ்

இதேபோல விரைவில் அறிவிக்கப்பட்ட அறிவிக்கப்பட்ட மின்தடை, திடீர் ஏற்படும் மின்தடை குறித்து எஸ்எம்எஸ் அனுப்பப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மின்வெட்டு இல்லாத மாநிலம்

மின்வெட்டு இல்லாத மாநிலம்

மின்வெட்டு பற்றி எஸ்.எம்.எஸ் அனுப்புவதெல்லாம் இருக்கட்டும் மின் வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகம் எப்போது மாறும் என்று கேட்கின்றனர் பொதுமக்கள்.

English summary
Power supply will be suspended in your area between 9 am and 5 pm for maintenance work- that could be a text message landing in your inbox soon from the Tamil Nadu Electricity Board (TNEB). The messaging system to alert residents of outages is part of the Restructured Accelerated Power Development and Reforms Programme (RAPDRP) of the Union power ministry.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X