For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

TNPSC: சித்தாண்டியின் சித்து வேலைகள்.. மனைவி சண்முகப்பிரியாவும் உடந்தை.. நெருக்கும் போலீஸ்!

சித்தாண்டி மனைவிக்கும் முறைகேட்டில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: சித்தாண்டியின் சித்து வேலைகளில் அவரது மனைவி சண்முகப்பிரியாவும் சிக்கி உள்ளார்... குரூப் 4 தேர்வு முறைகேட்டில் தோண்ட தோண்ட ஏகப்பட்ட ஷாக்குகள் நமக்கு தினமும் கிடைத்த படியே உள்ளன.

சில மாதங்களுக்கு முன்பு நடந்த குரூப் 4 தேர்வினை சுமார் 16 லட்சம் பேர் எழுதினர். இத்தனை பேர் பாடுபட்டு, படித்து தேர்வு எழுதினாலும், அதிர்ஷ்டம் என்னவோ கீழக்கரை, ராமேசுவரத்துக்குதான் அடித்தது.

மொத்தம் 39 பேர், முதல் 100 இடங்களுக்குள் வந்தது பெரும் சர்ச்சையானது... சிபிசிஐடி போலீசார் விசாரிக்க ஆரம்பித்தனர்.. அடுக்கடுக்காக அம்பலங்கள்.. நிறைய முறைகேடுகள்.. பல கோடி பணம் கைமாறியது என வெளிச்சத்துக்கு வந்தது. இதில் சம்பந்தப்பட்ட அரசு பணியில் இருப்பவர்களும், புரோக்கர்களும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

22 பேரிடம் ரூ. 2 கோடி பெற்று வேலை.. சித்தாண்டி பரபரப்பு வாக்குமூலம்.. சிக்கும் பெருந்தலைகள்? 22 பேரிடம் ரூ. 2 கோடி பெற்று வேலை.. சித்தாண்டி பரபரப்பு வாக்குமூலம்.. சிக்கும் பெருந்தலைகள்?

 சிவகங்கை

சிவகங்கை

அதிலும் ஆடு மேய்க்கும் திருவராஜ்-க்குதான் அடித்தது லக்.. மாநிலத்திலேயே முதல் இடத்தை பிடித்து இந்த மோசடியை வெளியே கொண்டு வந்தது சிவகங்கை மாவட்டம் பெரியகண்ணனூரை சேர்ந்த மிஸ்டர் திருவராஜ் தான்.. இதில சிக்கியவர்தான் அதே ஊரைச் சேர்ந்த சித்தாண்டி என்ற 45 வயது நபர். இவர் போலீஸாக இருக்கிறார்... அதிகாரிகளுக்கே தண்ணி காட்டி வந்த இவர் இப்போது போலீசாரின் பிடியில் உள்ளார்.

 சண்முகப்பிரியா

சண்முகப்பிரியா

இவரை அன்றிலிருந்தே தேடும்போதுதான், மனைவி சண்முகப்பிரியா, சித்தாண்டியின் தம்பி வேல்முருகன் உள்ளிட்ட சொந்தக்காரர்களின் பெயர்களும் அடிபட ஆரம்பித்தன. இவர்கள் எல்லோருமே இணைந்து, தங்களுக்கு வேண்டப்பட்டவர்கள் சிலரை இந்த தேர்வுகளில் வெற்றி பெற்று அடுத்தடுத்து கவர்ன்மென்ட் வேலையும் வாங்கி தந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

 வாக்குமூலம்

வாக்குமூலம்

ஆரம்பத்தில் இந்த விவகாரம் வெளியே வர ஆரம்பித்ததுமே சித்தாண்டி தலைமறைவானார்... சென்னை எழிலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்த அவருடைய மனைவி சண்முகபிரியாவும் ஆபீசுக்கு வரவில்லை.. லீவு எடுத்து கொண்டு தலைமறைவானார். இப்போது சித்தாண்டி கைதாகி உள்ள நிலையில் அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. "2 கோடி ரூபாய் பணம் வாங்கி கொண்டு, 22 பேரை கவர்ன்மென்ட் வேலைக்கு சேர்த்து விட்டேன் என்று வாக்குமூலம் தந்துவருகிறார் சித்தாண்டி.

 கணக்கு முடக்கம்

கணக்கு முடக்கம்

இப்போது சண்முகபிரியாவை பிடிக்கவும் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால் பிரியாவின் வங்கிக் கணக்குகளை முன்னதாகவே சிபிசிஐடி முடக்கியுள்ளது. சித்தாண்டி விவகாரத்தை பொறுத்தவரையில் மாட்டியுள்ளது சின்ன மீனா? அல்லது பெரிய மீன் யாரேனும் சிக்குவார்களா என்பது இனிமேல்தான் தெரியவரும்.

English summary
tnpsc: action takes against siddhaandi wife shanmuga priya in the Group4 abuse case
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X