For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2011 குரூப் 2 தேர்வில் மோசடி? ஒரே தெருவைச் சேர்ந்த 12 பேர் தேர்ச்சி.. வெடித்து கிளம்பும் சர்ச்சை!

Google Oneindia Tamil News

சென்னை: 2011ல் நடந்த குரூப் 2 தேர்வில் ஒரே தெருவைச் சேர்ந்த 12 பேர் எப்படி வெற்றி பெற்றார்கள், கடலூர் மற்றும் விழுப்புரத்தில் மட்டும் முதல் 100 ல் 60 இடங்களை பிடித்தது எப்படி என்பது குறித்து அறிய முக்கிய குற்றவாளிகளாக ஜெயகுமார் மற்றும் ஓம் காந்தனை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.

டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4, குரூப் 2ஏ ஆகிய தேர்வுகளில் முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தனித்தனியாக 3 வழக்குளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் இதுவரைர 46 பேரை கைது செய்துள்ளார்கள்.

நேற்று இரவு ஜெயக்குமாரின் நண்பரான திருவல்லிக்கேணியைச் சேர்ந்த அசோக்குமார்(38) என்வரை கைது செய்தனர். இவர்தான் ராயப்பேட்டையில் 'மேக்னஸ் கன்சல்டன்சி பிரைவேட் லிமிடெட் அலுவலகத்தை பயன்படுத்தி கீழக்கரை மையத்தில் மோசடி விண்ணப்பதாரர்களுக்காக விண்ணப்பித்தாராம்,.

60 பேர் யார் யார்

60 பேர் யார் யார்

இந்த பிரச்சனை ஒருபுறம் எனில் 2011ல் நடந்த குரூப் 2 தேர்விலும் மோசடி நடந்ததா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த முக்கிய காரணம் . கடந்த 2011ம் ஆண்டு நடந்த குரூப் 2 தேர்வின் போது கடலூர் மற்றும் விழுப்புரத்தை சேர்ந்த 60 பேர் முதல் 100 இடங்களை பிடித்து இருந்தார்கள். அத்துடன் கடலூர் மாவட்டம் கிழக்கு ராமாபுரத்தில் ஒரே தெருவைச் சேர்ந்த 12 பேர் குரூப் 2தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது உயர் பதவியில் உள்ளார்கள்.

இன்று 12 பேர் ஆஜர்

இன்று 12 பேர் ஆஜர்

இதையடுத்து சந்தேகத்தின் பேரில் குரூப்2 தேர்வில் வெற்றி பெற்று தற்போது உயர் பதவியில் உள்ள 12 அரசு அதிகாரிகளும் இன்று கடலூரில் உள்ள மாவட்ட சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதேநேரம் 12 அரசு அதிகாரிகளிடம் இன்று நடைபெறும் விசாரணையில் மோசடி உறுதி செய்யப்பட்டால் அவர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்யவும் முடிவு செய்துள்ளார்கள்.

2 பேர் கைது

2 பேர் கைது

முன்னதாக 2001ல் வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக கடலூர் அருகே உள்ள நடுவீரப்பட்டை சேர்ந்த தயாநிதி, பத்திரக்கோட்டையை நேர்ந்த தவமணி ஆகியோரை போலீசார் கைது செய்தார்கள். . இந்த வழக்கு வினாத்தாள் வெளியானதால் தான் முதல் 100 இடங்களில் 60 பேர் வந்ததாக அப்போது குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில்

ஜெயகாந்தன்

ஜெயகாந்தன்

இதற்கிடையே டிஎன்பிஎஸ்சி வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயகுமார் மற்றும் ஓம்காந்தனை மீண்டும் 7 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்கள்.. இதனால் டிபிஎஸ்சியில் மோசடியாக பணம் கொடுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்கள் கலக்கத்தில் உள்ளார்கள்.

English summary
tnpsc group 2 exam scam? how 12 persons who lives same street passed exam,: cbcid Petition to inquire Jayakumar and Omkandan into police custody
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X