For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி ஹைகோர்ட்டில் முறையீடு

நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி ஹைகோர்ட்டில் வழக்கறிஞர் முறையீடு செய்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    தூத்துக்குடியில் அருணா ஜெகதீசன் விசாரணை-வீடியோ

    சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி ஹைகோர்ட்டில் வழக்கறிஞர் முறையீடு செய்துள்ளார்.

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தின்போது பேரணி சென்ற பொதுமக்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

    To ban Judge Aruna Jagadeesan interrogation, Advocate appeals in Chennai HC

    100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இதுதொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை கமிஷனை தமிழக அரசு அமைத்தது.

    இதனிடையே இந்த சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி ஹைகோர்ட்டில் வழக்கறிஞர் சூர்யபிரகாசம் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

    இந்த நிலையில் அருணா ஜெகதீசன் அவரது விசாரணையை தொடங்கியுள்ளார். துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த மாணவி ஸ்னோலின் வீட்டுக்கு சென்று அருணா ஜெகதீசன் தனது விசாரணையை தொடங்கினார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. துப்பாக்கி சூடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரிய மனு நிலுவையில் உள்ளதால் நீதி விசாரணை நடத்த கூடாது என்று சூர்யபிரகாசம் முறையீடு செய்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த வழக்கு இன்று பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது.

    English summary
    Advocate Surya Prakash appeals Chennai Highcourt to ban Judge Aruna Jagadeesan's investigation in Thoothukudi firing.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X